சில மாநிலங்களில் காக்கைகளும், வெளிநாட்டுப் பறவைகளும் கூட்டங் கூட்டமாகச் செத்து மடிந்தன. இவற்றின் மாதிரிகளைச் சோதித்ததில், பறவைக் காய்ச்சலுக்குக் காரணமான வைரஸ் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம், அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்களுக்கும், தலைமை வனக் காப்பாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது, அதில், கண்காணிப்புக் குழுக்களை அமைத்துப் பறவைகள் சரணாலயம், வெளிநாட்டுப் பறவைகள் வருமிடங்கள், கோழிப் பண்ணைகள் ஆகியவற்றில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
இறந்த பறவைகளின் மாதிரிகளை மிகக் கவனத்துடன் ஆய்வுக்கு எடுக்கவும், மனிதர்களுக்கும் பிற வளர்ப்பு விலங்குகளுக்கும் பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.