மாணவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் சூர்யா.! நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய ஆயத்தம்.! சூர்யாவின் விளம்பர யுக்தியா.?

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் அவ்வப்போது ஏதவாது சர்ச்சையில் சிக்குவது வழக்கம், இதில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம், நடிகர் சூர்யாவின் சினிமா துறையில் ஆரம்பகட்ட படம் ஏதும் சொல்லும்படி அமையவில்லை, இருந்தாலும் தனது தந்தை சிபாரிசில் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார், இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்த நந்தா படம் மிக பெரிய வெற்றியை பெற்று சூர்யாவுக்கு நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்று தந்தது.

அதன் பின் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த சூர்யா கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து அவர் நடித்த எட்டு படங்கள் தோல்வி படங்களாக அமைந்தது. இவரின் படங்கள் தோல்விக்கு காரணம் தேவை இல்லாத பிரசனைகளுக்கு கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கி கொள்வது தான் காரணம் என்றும், மேலும் இவர்களின் குடும்ப ஆதிக்கம் சினிமா துறையில் ஒரு மாஃபியா போன்று செயல்படுவதாகவும் சமீபத்தில் பிரபல நடிகை ஒருவர் குற்றம் சுமத்தி இருந்தார்.

இந்நிலையில் நேற்று நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில்,கரோனா அச்சத்தால்‌ உயிருக்குப் பயந்து ‘வீடியோ கான்பிரன்ஸிங்‌’ மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது. ‘தேர்வு பயத்தில்‌ மாணவர்‌ தற்கொலை’ என்ற செய்தி, அதிகபட்சம்‌ ஊடகங்களில்‌ அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்து போன மாணவர்களின்‌ மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப்‌ பிழைகளை கண்டுபிடிக்கும்‌ சாணக்கியர்கள்‌, ‘அனல்‌ பறக்க’ விவாதிப்பார்கள்‌ என தெரிவிட்டிருந்தார்.

இதில்சூர்யாவின் அறிக்கையில் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதிமன்றம் நீதி வழக்குவதாகவும், ஆனால் மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுவதாகவும் சூர்யா தனது அறிக்கையில் கூறியிருந்ததை குறிப்பிட்டு அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர வேண்டும் என்று நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனால் சூர்யாவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர வாய்ப்பு அதிக உள்ளதாக கூறப்படுகிறது. நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா மாணவர்களை அச்சம் ஏற்படுத்தும் விதத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளதாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, மேலும் தொடர்ந்து எட்டு படங்கள் தோல்வி படங்களாக கொடுத்து வரும் சூர்யா, தற்போது வெளியாக உள்ள சூரரை போற்று படத்துக்கு விளம்பர யுக்தியாக கூட இருக்கலாம் சூர்யாவின் இந்த அறிக்கை, என விமர்சனம் எழுந்துள்ளது.

மாணவர்களின்‌ உயிர்களையும்‌ பறிக்கும் ‘மனுநீதி’ தேர்வுகள்.! ஒன்றிணைந்து குரல்‌ எழுப்புவோம்‌”.! சூர்யா வேதனை.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *