போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

தமிழகம் முழுவதும் 3 நாட்களாக நீடித்து வந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று திரும்பப் பெறப்பட்டது. ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உடனடி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள், பிப்ரவரி 25ஆம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதற்கு திமுக ஆதரவு தொழிற்சங்கமாக தொமுச, சிஐடியு, எச்எம்எஸ், ஏஐடியூசி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. இதனால் […]

Continue Reading

2ம் நாளாக பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்: அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம், 2ஆம் நாளாக இன்றும் தொடர்கிறது. பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள், ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உடனடி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று (பிப்ரவரி 25) முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதில், திமுக ஆதரவு தொழிற்சங்கமாக தொ.மு.ச., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் […]

Continue Reading

போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்: அரசு பஸ்கள் ஓடுமா? ஓடாதா?

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 25 (வியாழக்கிழமை) முதல், காலைவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குரவத்துக் கழகத்தில் 21,000 பேருந்துகள் […]

Continue Reading