அதிமுக விருப்பமனு பெற அவகாசம் குறைப்பு: மார்ச் 3 கடைசி நாள்

தேர்தலுக்கான அவகாசம் குறைவாக உள்ளதால், அதிமுக விருப்ப மனுக்கள் வரும் 3ஆம் தேதி வரை மட்டுமே பெறப்படும் என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஏறக்குறைய ஒருமாத கால அவகாசம் மட்டுமே உள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை மின்னல் வேகத்தில் மேற்கொண்டு வருகின்றன. ஆளும் அதிமுக தரப்பில், கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்குவது போன்ற பணிகள் இன்னமும் முழுமை அடையவில்லை. அதை முடித்து வேட்பாளர் நேர்காணல், இறுதிப்பட்டியல் வெளியீடு, தொகுதிகளில் பிரசாரம், […]

Continue Reading

தொகுதிப் பங்கீடு தொடர்பாக அமித் ஷாவுடன் ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். நள்ளிரவு வரை பேச்சு

அதிமுக கூட்டணியில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்ல்செவம் உள்ளிட்டோர், நள்ளிரவு வரை பேச்சு நடத்தினர். அதை தொடர்ந்து, அமைச்சர் அமித்ஷா டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தற்போது, தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு இறுதி செய்வதில், அதிமுக- திமுக கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. […]

Continue Reading

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள்! பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் பாமகவும் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் என்று, நேற்று அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, தமிழக அரசியல் களம் சுறுசுறுப்படைந்துள்ளது. அதிமுக, திமுக கட்சிகள் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்த உள்ளன. மார்ச் 2 முதல் 6 வரை விருப்பமனு அளித்த வேட்பாளர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார் என திமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த சூழலில் அதிமுக […]

Continue Reading

ஈபிஎஸ் -ஓபிஎஸ் போட்டியிடும் தொகுதி: ‘செண்டிமெண்டாக’ ஜெ. பிறந்தநாளில் விருப்ப மனு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில், அ.தி.மு.க. சார்பில் விருப்பமனு பெறும் நிகழ்வை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். எடப்பாடி தொகுதியில் ஈ.பி.எஸ்., போடி தொகுதியில் ஓ.பி.எஸ். போட்டியிட மனு அளிக்கின்றனர். அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் […]

Continue Reading