திடீரென அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி: திக்குமுக்காடிப்போன அரசியல் கட்சிகள்

எதிர்பார்ப்புக்கு மாறாக தமிழக சட்டசபைத் தேர்தல் திடீரென நேற்று அறிவிக்கப்பட்டது; இதை சற்றும் எதிர்பார்க்காத திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளை உடனே முடித்தாக வேண்டிய நிர்பந்ததுக்கு ஆளாகியுள்ளன. தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம்; ஏப்ரல் கடைசியில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் நினைத்திருந்தன. ஆனால், யாருமே எதிர்பாராத வகையில், சட்டசபை தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 26ம் தேதி மாலை […]

Continue Reading

நாளை தமிழகம் வருகிறார் அமித்ஷா! இன்று நெல்லைக்கு ராகுல் வருகை

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது; உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகிறார்; காங்கிரஸ் எம்.பி. ராகுல், இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது . வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. கூட்டணியை இறுதி செய்வது, தொகுதிப் பங்கீடு […]

Continue Reading

முதல்வரை எதிர்த்து சிரிப்பு நடிகர்? விருப்ப மனு அளித்ததால் பரபரப்பு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து போட்டியிட, திமுக சார்பில் சினிமா காமெடி நடிகர் இமான் மனு செய்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு என்பதால், குறுகிய அவகாசமே உள்ளது. அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, தாமக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு பெற்று வருகின்றன. அதிமுக சார்பில் பெறப்பட்ட விருப்ப மனுவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட மனு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திமுக சார்பிலும் […]

Continue Reading

பிரதமர் இன்று புதுச்சேரி, கோவைக்கு வருகை!தமிழில் டிவிட் போட்டு உற்சாகம்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று (25 ம் தேதி) புதுச்சேரி மற்றும் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் தலைவர்களின் வருகை சூடுபிடித்துள்ளது. இச்சூழலில், புதுச்சேரியில், 3,023 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இன்று புதுச்சேரி வருகிறார். டில்லியில் இருந்து இன்று காலை, 7:45 மணியளவில் தனி விமானத்தில் புறப்படும் பிரதமர், சென்னை விமான நிலையத்திற்கு […]

Continue Reading

ஈபிஎஸ் -ஓபிஎஸ் போட்டியிடும் தொகுதி: ‘செண்டிமெண்டாக’ ஜெ. பிறந்தநாளில் விருப்ப மனு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில், அ.தி.மு.க. சார்பில் விருப்பமனு பெறும் நிகழ்வை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். எடப்பாடி தொகுதியில் ஈ.பி.எஸ்., போடி தொகுதியில் ஓ.பி.எஸ். போட்டியிட மனு அளிக்கின்றனர். அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் […]

Continue Reading