டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை நேரடியாக கண்காணிக்க ஹைகோர்ட் முடிவு

தமிழக சட்டம் ஒழுங்குப் பிரிவில் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது; அத்துடன், இவ்வழக்கை நீதிமன்றமே கண்காணிக்கும் எனவும் அதிரடியாக தெரிவித்துள்ளது. தமிழக சட்டம் ஒழுங்குப் பிரிவு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெரம்பலூரில் உள்ள பெண் ஐபிஎஸ் திகாரிக்கு, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பெண் ஐ.பி.எஸ்.அதிகாரியின் இந்த புகார், தமிழக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் […]

Continue Reading