தொகுதிப் பங்கீடு தொடர்பாக அமித் ஷாவுடன் ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். நள்ளிரவு வரை பேச்சு

அதிமுக கூட்டணியில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்ல்செவம் உள்ளிட்டோர், நள்ளிரவு வரை பேச்சு நடத்தினர். அதை தொடர்ந்து, அமைச்சர் அமித்ஷா டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தற்போது, தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு இறுதி செய்வதில், அதிமுக- திமுக கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. […]

Continue Reading

பாஜக – அதிமுக இடையே தொகுதிப்பங்கீடு பேச்சு வார்த்தை

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக-பாஜக இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழகம், மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபைத் தேர்தல், ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ஆம் தேதி தொடங்குகிறது. குறுகிய அவகாசமே உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் இன்னமும் தொகுதிப் பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த பணிகளையுமே முடிக்கவில்லை. திடுதிடுப்பென தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் திமுக உள்ளிட்ட கட்சிகள் […]

Continue Reading

தமிழக சட்டசபைத் தேர்தல் எப்போது? இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை வெளியிடப்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகம், புதுச்சேரி ,கேரளா, மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பதவிக்காலம் ஏப்ரல், மே மாதங்களில் நிறைவு பெறுகிறது. தமிழக அரசின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் குறித்து ஆய்வு […]

Continue Reading

திமுக ஆட்சியை பிடிக்குமா? நம்பிக்கை இழக்கும் ஸ்டாலின் – காரணம் இதுதான்!

வரும் சட்டசபைத் தேர்தலில் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிக்கையில் இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது திமுகவின் வெற்றியை பறிக்க சதி நடக்கிறது என்று புலம்பத் தொடங்கிவிட்டார். பாஜக – அதிமுகவினரின் தீவிரப்பிரசாரம், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவும் அரசு ஆதரவு மனப்போக்கு உள்ளிட்டவையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று தெரிகிறது. ஏப்ரல் கடைசிக்குள் வாக்குப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் […]

Continue Reading

விரைவில் தொண்டர்களை சந்திப்பேன்!சசிகலா அதிரடி அறிவிப்பு

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுக்கு துணை நிற்பேன்; விரைவில் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திப்பேன் என்று, சசிகலா அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அவரது நெருங்கிய தோழியாக இருந்து வந்த சசிகலா, சென்னை தியாகராயநகர் இல்லத்தில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் நிருபர்களிடம் சசிகலா கூறியதாவது: இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். அம்மாவின் கனவு நிறைவேற அனைவரும் ஒன்றிணைந்து தேனீக்கள் போல் உழைக்க வேண்டும் ஜெயலலிதாவின் […]

Continue Reading

ஈபிஎஸ் -ஓபிஎஸ் போட்டியிடும் தொகுதி: ‘செண்டிமெண்டாக’ ஜெ. பிறந்தநாளில் விருப்ப மனு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில், அ.தி.மு.க. சார்பில் விருப்பமனு பெறும் நிகழ்வை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். எடப்பாடி தொகுதியில் ஈ.பி.எஸ்., போடி தொகுதியில் ஓ.பி.எஸ். போட்டியிட மனு அளிக்கின்றனர். அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் […]

Continue Reading