தொகுதிப்பங்கீட்டில் திமுக மீது அதிருப்தி: கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் வெளியேறுகிறதா?

திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. கூட்டணியில் இருந்து வெளியேறுவது உள்ளிட்ட வாய்ப்புகள் குறித்து அக்கட்சி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒருமாத அவகாசமே இருப்பதால், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்வதில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றன. அதிமுக கூட்டணியை பொருத்தவரை, பாமகவுடன் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது; அக்கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக மற்றும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று […]

Continue Reading

2ஜி, 3ஜி, 4ஜி எல்லாமே தமிழகத்தில் உள்ளது:அமித்ஷா வைத்த குறியால் திமுக கலக்கம்

பிரதமர் மோடியை தொடர்ந்து, அவரது வலதுகரமாக செயல்படும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், தேர்தல் பிரசாரத்தில் திமுகவை குறி வைத்து, கடுமையாக தாக்கி பேசியிருப்பது, திமுக தலைமையை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 2ஜி 3ஜி 4ஜி எல்லாமே தமிழகத்தில் உள்ளது என்ற அமித்ஷாவின் ஆணித்தரமான குற்றச்சாட்டு, திமுக தலைவர்களின் நிம்மதியை கெடுத்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்யும் பாஜக தலைவர்கள், பொதுவாக காங்கிரஸ் தலைமையை கடுமையாக விமர்சனம் செய்வார்கள், அல்லது ஆளுங்கட்சி சாதனைகளை பட்டியலிட்டு மக்களிடம் பேசுவார்கள். ஆனால், இம்முறை […]

Continue Reading

திடீரென அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி: திக்குமுக்காடிப்போன அரசியல் கட்சிகள்

எதிர்பார்ப்புக்கு மாறாக தமிழக சட்டசபைத் தேர்தல் திடீரென நேற்று அறிவிக்கப்பட்டது; இதை சற்றும் எதிர்பார்க்காத திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளை உடனே முடித்தாக வேண்டிய நிர்பந்ததுக்கு ஆளாகியுள்ளன. தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம்; ஏப்ரல் கடைசியில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் நினைத்திருந்தன. ஆனால், யாருமே எதிர்பாராத வகையில், சட்டசபை தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 26ம் தேதி மாலை […]

Continue Reading

முதல்வரை எதிர்த்து சிரிப்பு நடிகர்? விருப்ப மனு அளித்ததால் பரபரப்பு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து போட்டியிட, திமுக சார்பில் சினிமா காமெடி நடிகர் இமான் மனு செய்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு என்பதால், குறுகிய அவகாசமே உள்ளது. அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, தாமக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு பெற்று வருகின்றன. அதிமுக சார்பில் பெறப்பட்ட விருப்ப மனுவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட மனு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திமுக சார்பிலும் […]

Continue Reading

சஷ்டி நாளில் வாக்கு எண்ணிக்கையா? திமுகவினர் கலக்கம்!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது; வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ம் தேதி சஷ்டி நாளாக இருப்பதால், முடிவுகள் எதிர்மறையாக அமைந்துவிடுமோ என்று, செண்டிமெண்டாக திமுகவினர் கவலையடைந்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்குகிறது. மனு மீதான பரிசீலனை, மார்ச் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் வாக்குப்பதிவு, […]

Continue Reading

திமுக ஆட்சியை பிடிக்குமா? நம்பிக்கை இழக்கும் ஸ்டாலின் – காரணம் இதுதான்!

வரும் சட்டசபைத் தேர்தலில் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிக்கையில் இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது திமுகவின் வெற்றியை பறிக்க சதி நடக்கிறது என்று புலம்பத் தொடங்கிவிட்டார். பாஜக – அதிமுகவினரின் தீவிரப்பிரசாரம், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவும் அரசு ஆதரவு மனப்போக்கு உள்ளிட்டவையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று தெரிகிறது. ஏப்ரல் கடைசிக்குள் வாக்குப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் […]

Continue Reading