‘ஸ்டாலின்தான் வர்றாரு’ விளம்பரப்பதாகை: திமுகவுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு!

— திமுக சார்பில் ‘ஸ்டாலின்தான் வர்றாரு’ என்ற விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கு, தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. தமிழகத்தில், ஏப்ரல் 6ம் தேதி சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே, அதிமுக – திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களை தொடங்கிவிட்டன. அதிமுக தரப்பில் வெற்றி நடைபோடும் தமிழகமே என்ற பாடலுடன் விளம்பரம், டிவி, நாளிதழ்கள், ரேடியோ, இணையதளங்களை ஆக்கிரமித்தன. அதிமுகவின் விளம்பரத்திற்கு கிடைத்த ஆதரவை பார்த்து, திமுகவும் தன் பங்கிற்கு […]

Continue Reading

சஷ்டி நாளில் வாக்கு எண்ணிக்கையா? திமுகவினர் கலக்கம்!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது; வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ம் தேதி சஷ்டி நாளாக இருப்பதால், முடிவுகள் எதிர்மறையாக அமைந்துவிடுமோ என்று, செண்டிமெண்டாக திமுகவினர் கவலையடைந்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்குகிறது. மனு மீதான பரிசீலனை, மார்ச் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் வாக்குப்பதிவு, […]

Continue Reading

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்! கொரோனாவால் பல கட்டுப்பாடுகளை வெளியிட்ட ஆணையம்

தமிழகம் உள்பட சட்டசபை தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதி முடிவடையவுள்ளது. இதேபோல் புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபைகளின் ஆயுட்காலமும் ஏப்ரல், மே மாதங்களில் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, தேர்தல் ஏற்பாடுகளை தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. கடந்த 24 ஆம் தேதி 5 […]

Continue Reading