இந்தியா அழைத்து வரப்படும் நிரவ் மோடி: மத்திய அரசின் சட்டப்போராட்டத்திற்கு வெற்றி

வங்கிக் கடன் மோசடி வழக்கில் லண்டனில் கைதான வைர வியாபாரி நிரவ் மோடியை, நாடு கடத்தி இந்தியா கொண்டு செல்வதற்கு தடையில்லை என்று இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரை இந்தியா அழைத்து வர மத்திய அரசு மேற்கொண்ட சட்ட போராட்டத்தின் வெற்றியாகவே இது கருதப்படுகிறது. வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13,578 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிந்த சிபிஐ, அவரது சொத்துகளை முடக்கியது. […]

Continue Reading