9,10,11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: முதல்வர் பழனிச்சாமி அதிரடி!
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர், தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வின்றி 9.10.11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவித்தார். அதேபோல், தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மேலும் ஓராண்டுக்கு அதாவது 60 ஆக உயர்த்துவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்ட […]