மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடனான நினைவுகளைப் பகிர்ந்து கண்ணீர் விட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற தேர்தல் பணிக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டபோது கண்ணீர் விட்டு அழுதார். ஜெயலலிதாவின் கடைசி சட்டமன்றப் பேச்சு குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டபோது அமைச்சர் கண்கலங்கினார். தாம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது அமைச்சர்கள் மூலம் தேவையான உதவிகளைச் செய்து தன்னைப் பிள்ளைபோலப் பார்த்துக் கொண்டார் ஜெயலலிதா என்று கூறி அமைச்சர் மீண்டும் கண்ணீர் விட்டு அழுதார்.

Continue Reading

மின்மிகை மாநிலமான தமிழகம் : பிரச்சாரத்தில் முதலமைச்சர் பெருமிதம்

திமுக ஆட்சியில் மின்வெட்டு காரணமாக தொழிற்சாலைகள் தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு சென்றதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அதிமுக ஆட்சியில் தொழில் முனைவோர் தமிழகத்தை தேடி வந்து தொழில் தொடங்குவதாக தெரிவித்தார்.  கரூர் பேருந்து நிலையம் அருகே, கரூர் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரவக்குறிச்சி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை, கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், குளித்தலை அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் ஆகியோருக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். […]

Continue Reading