மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடனான நினைவுகளைப் பகிர்ந்து கண்ணீர் விட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற தேர்தல் பணிக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டபோது கண்ணீர் விட்டு அழுதார். ஜெயலலிதாவின் கடைசி சட்டமன்றப் பேச்சு குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டபோது அமைச்சர் கண்கலங்கினார். தாம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது அமைச்சர்கள் மூலம் தேவையான உதவிகளைச் செய்து தன்னைப் பிள்ளைபோலப் பார்த்துக் கொண்டார் ஜெயலலிதா என்று கூறி அமைச்சர் மீண்டும் கண்ணீர் விட்டு அழுதார்.

Continue Reading

மின்மிகை மாநிலமான தமிழகம் : பிரச்சாரத்தில் முதலமைச்சர் பெருமிதம்

திமுக ஆட்சியில் மின்வெட்டு காரணமாக தொழிற்சாலைகள் தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு சென்றதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அதிமுக ஆட்சியில் தொழில் முனைவோர் தமிழகத்தை தேடி வந்து தொழில் தொடங்குவதாக தெரிவித்தார்.  கரூர் பேருந்து நிலையம் அருகே, கரூர் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரவக்குறிச்சி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை, கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், குளித்தலை அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் ஆகியோருக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். […]

Continue Reading

அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க தேனீக்கள் போல் அனைவரும் பாடுபடவேண்டும்-முதலமைச்சர் வேண்டுகோள்

அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். சேலத்தில் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அம்மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்ததோடு நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக, கூட்டத்திற்கு வந்த முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிக்க […]

Continue Reading

ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக

ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்ச பூதத்திலும் ஊழல் செய்த கட்சி திமுக என சாடியுள்ளார். ஒவ்வொரு முறை ஆட்சிக்கும் வரும் போதும், விதவிதமாக ஊழல் செய்யும் கட்சி திமுக என்றும், அப்பாவி மக்களின் நிலங்களை ஈவு, இரக்கமின்றி அபகரித்த கட்சி திமுக எனவும் துணை முதலமைச்சர் விமர்சித்துள்ளார். ஊழல் வரலாற்றில் உலக […]

Continue Reading

தமிழகத்தில் விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

விவசாய பயிர் கடன் தள்ளுபடி தமிழகத்தில் விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ரூ.12,110 கோடி விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி , கொரோனா காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயிர்க்கடன் தள்ளுபடி – எடப்பாடி பழனிசாமி விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் – எடப்பாடி பழனிசாமி

Continue Reading