வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும் கொரோனா தொற்றாளர்கள் கவனிக்க வேண்டியவை

கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அனைவரையும் மருத்துவமனைகளில் சேர்ப்பது என்பதோ, அனைவருக்கும் மருத்துவமனைகளில் இடம் ஒதுக்குவதோ சாத்தியமற்றது. எனவே , நோய்த்தொற்று உள்ளவர்கள் அவர்களது வயது, அறிகுறிகள் மற்றும் நோய்க்குறி, அவர்களுக்கு இருக்கும் இணை நோய்கள் ஆகியவற்றை வைத்து அறிவுப்பூர்வமான முறையில் வகைப்படுத்தும் வேலையை மருத்துவர்கள் செய்வார்கள். கொரோனாவின் சாதாரண அறிகுறிகள் மட்டும் இருப்பவர்களை அவர்களது இல்லங்களில் தனியாக கழிப்பறை வசதியுடன் கூடிய அறை இருப்பின், இல்லங்களில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். […]

Continue Reading

நாடு முழுவதும் 89,129 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

24 மணி நேரத்தில், நாட்டில் 89 ஆயிரத்து 129 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை தெரிவித்துள்ள சுகாதார அமைச்சகம், நேற்று ஒரே நாளில் 714 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளது. தொற்று பாதித்த 6 லட்சத்து 58 ஆயிரத்து 909 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 7 கோடியே 30 லட்சத்து 54 ஆயிரத்து 295 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Continue Reading

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

சீரம் நிறுவனத்தில் இருந்து தடுப்பூசிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் இலங்கையில் கொரேனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணியை இலங்கை தொடங்கியது. முதற்கட்டமாக 5 லட்சம் டோஸ்கள் வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்தடுத்து தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது இதற்கான மருந்துகள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இலங்கை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சீனாவிடமிருந்து 6 லட்சம் […]

Continue Reading

அமெரிக்காவில் வீணாகி போன ஒன்றரை கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து !…

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் நடந்த தனிமனித தவறால் ஒன்றரை கோடி டோசுகள் கொரோனா தடுப்பூசி வீணானது. அங்குள்ள பால்ட்டிமோர் தொழிற்சாலையில் ஜான்சன்&ஜான்சனின்  தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒரு டோஸ் மட்டும் போட வேண்டிய தடுப்பூசியாகும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசியும் அங்கு தயாரிக்கப்பட்டு வருகிறது. எமர்ஜென்ட்  பயோசொல்யூஷன்ஸ் என்ற மருந்து நிறுவனம் இந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிலையில், நிறுவனப் பணியாளர்கள் சிலரின் தவறால் இந்த இரண்டு தடுப்பூசிகளின் வேதிப்பொருட்களும் ஒன்றாக கலந்து விட்டதாக கூறப்படுகிறது.  […]

Continue Reading

பிரேசிலில் புது உச்சமாக கொரோனாவுக்கு பலி..!

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புது உச்சமாக உயிர் கொல்லி கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 780 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலன் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 17 ஆயிரத்து 936 ஆக அதிகரித்து உள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் அங்கு 58 ஆயிரத்து 924 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர் உயிரிழப்பு காரணமாக பிரேசிலில் இரவிலும் கல்லறை தோட்டங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. இடப் பற்றாக்குறை […]

Continue Reading

இந்தியாவில் புதிதாக 39,726 பேருக்கு கொரோனா பாதிப்பு !…

இந்தியாவில் நேற்றுப் புதிதாக 39 ஆயிரத்து 726 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 71 ஆயிரத்து 282 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் மட்டும் புதிதாக 25 ஆயிரத்து 833 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நேற்றுவரை மூன்று கோடியே 93 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மும்பையில் கொரோனா பரவல் கடந்த ஒருவாரமாக அதிகரித்துள்ளபோதும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. இந்நிலையில் தாதரில் உள்ள […]

Continue Reading

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா அதிகரிப்பு புதிதாக 35,871 பேருக்கு தொற்று அச்சத்தில் மக்கள் !

இந்தியாவில் புதனன்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 871ஆக அதிகரித்துள்ளது.தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 52 ஆயிரத்து 364 ஆக உயர்ந்துள்ளது. அதிக அளவாக மகாராஷ்டிரத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 179ஆகவும், தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 760 ஆகவும் உள்ளது.  குஜராத்தின் அகமதாபாத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசுப் பேருந்துப் போக்குவரத்து இன்று முதல் […]

Continue Reading

குஜராத்தில் 4 பெரு நகரங்களில் இரவு நேர ஊரடங்கா !

அகமதாபாத், வடோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட் நகரங்களில் நாளை முதல் வரும் 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊடரங்கை அமல்படுத்த குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. குஜராத்தில் கொரோனா தொற்று தினசரி எண்ணிக்கை 900 ஐ நெருங்கி உள்ளது. அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் 15 ஆயிரத்திற்கும் அதிகமாக தினசரி தொற்று பதிவாகி வருகிறது.  எனவே  வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் திட்டத்துடன், நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை  4 நகரங்களிலும் […]

Continue Reading

கொரோனா பரவல் அதிகரிப்பதால் ரயில்களை 100 சதவீதம் இயக்க உத்தரவிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்குமாறு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கொரோனா ஊடரங்கால் கடந்த மார்ச் முதல் ரத்து செய்யப்பட்ட ரயில் போக்குவரத்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 65 சதவிகிதம் அளவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் 100 சதவிகிதம் இயக்க உத்தரவிடவேண்டும் என பொதுநல வழக்கு தாக்கலானது. இதை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனிமனித விலகல் உள்ளிட்ட விதிகளை  புறநகர் ரயில்களில் அவற்றை […]

Continue Reading