கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

சீரம் நிறுவனத்தில் இருந்து தடுப்பூசிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் இலங்கையில் கொரேனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணியை இலங்கை தொடங்கியது. முதற்கட்டமாக 5 லட்சம் டோஸ்கள் வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்தடுத்து தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது இதற்கான மருந்துகள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இலங்கை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சீனாவிடமிருந்து 6 லட்சம் […]

Continue Reading

அமெரிக்காவில் வீணாகி போன ஒன்றரை கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து !…

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் நடந்த தனிமனித தவறால் ஒன்றரை கோடி டோசுகள் கொரோனா தடுப்பூசி வீணானது. அங்குள்ள பால்ட்டிமோர் தொழிற்சாலையில் ஜான்சன்&ஜான்சனின்  தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒரு டோஸ் மட்டும் போட வேண்டிய தடுப்பூசியாகும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசியும் அங்கு தயாரிக்கப்பட்டு வருகிறது. எமர்ஜென்ட்  பயோசொல்யூஷன்ஸ் என்ற மருந்து நிறுவனம் இந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிலையில், நிறுவனப் பணியாளர்கள் சிலரின் தவறால் இந்த இரண்டு தடுப்பூசிகளின் வேதிப்பொருட்களும் ஒன்றாக கலந்து விட்டதாக கூறப்படுகிறது.  […]

Continue Reading

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் எதிரொலி: தடுப்பு மருந்து ஏற்றுமதியை நிறுத்திய சீரம் நிறுவனம்

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் உள்நாட்டுத் தேவையை நிறைவு செய்வதற்காக வெளிநாடுகளுக்குப் பெருமளவிலான கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதியை சீரம் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த இருவாரங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக கொரோனா தடுப்பு மருந்து தயாரித்து வரும் சீரம் நிறுவனம் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் குறைந்த வருமானம் உள்ள 64 நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்படும் என யூனிசெப் தெரிவித்துள்ளது. […]

Continue Reading

இந்தியாவில் இதுவரை 5.08 கோடிப் பேருக்கு கொரோனா தடுப்பூசி..!

இந்தியாவில் ஐந்து கோடிக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜனவரி 16ஆம் நாள் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று மாலை வரை மொத்தம் 5 கோடியே 8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் புதிதாக 47 ஆயிரத்து 262 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 68 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளது.

Continue Reading