கொரோனா தொற்று அதிகரிப்பு – மதுரை நிலவரம் என்ன?

சீனா தனது சுய லாபத்துக்காக கொரோனா போன்ற கொடிய வைரஸ் நோய்களை பரப்பி வருகிறது. இதனால் உலகெங்கிலும் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், லட்சக்கணக்கான மக்கள் இறந்து போயுள்ளனர், பல பல கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். கோவிட்-19 என பெயரிடப்பட்ட இந்த கொரோனா வைரஸ் தனது இரண்டாவது சுற்றை இந்தியாவில் துவக்கியுள்ளது. ஒரே நாளில் சுமார் 3 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார் 50 இடங்களில் இதன் […]

Continue Reading

வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும் கொரோனா தொற்றாளர்கள் கவனிக்க வேண்டியவை

கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அனைவரையும் மருத்துவமனைகளில் சேர்ப்பது என்பதோ, அனைவருக்கும் மருத்துவமனைகளில் இடம் ஒதுக்குவதோ சாத்தியமற்றது. எனவே , நோய்த்தொற்று உள்ளவர்கள் அவர்களது வயது, அறிகுறிகள் மற்றும் நோய்க்குறி, அவர்களுக்கு இருக்கும் இணை நோய்கள் ஆகியவற்றை வைத்து அறிவுப்பூர்வமான முறையில் வகைப்படுத்தும் வேலையை மருத்துவர்கள் செய்வார்கள். கொரோனாவின் சாதாரண அறிகுறிகள் மட்டும் இருப்பவர்களை அவர்களது இல்லங்களில் தனியாக கழிப்பறை வசதியுடன் கூடிய அறை இருப்பின், இல்லங்களில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். […]

Continue Reading

நாடு முழுவதும் 89,129 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

24 மணி நேரத்தில், நாட்டில் 89 ஆயிரத்து 129 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை தெரிவித்துள்ள சுகாதார அமைச்சகம், நேற்று ஒரே நாளில் 714 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளது. தொற்று பாதித்த 6 லட்சத்து 58 ஆயிரத்து 909 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 7 கோடியே 30 லட்சத்து 54 ஆயிரத்து 295 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Continue Reading

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

சீரம் நிறுவனத்தில் இருந்து தடுப்பூசிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் இலங்கையில் கொரேனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணியை இலங்கை தொடங்கியது. முதற்கட்டமாக 5 லட்சம் டோஸ்கள் வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்தடுத்து தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது இதற்கான மருந்துகள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இலங்கை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சீனாவிடமிருந்து 6 லட்சம் […]

Continue Reading

அமெரிக்காவில் வீணாகி போன ஒன்றரை கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து !…

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் நடந்த தனிமனித தவறால் ஒன்றரை கோடி டோசுகள் கொரோனா தடுப்பூசி வீணானது. அங்குள்ள பால்ட்டிமோர் தொழிற்சாலையில் ஜான்சன்&ஜான்சனின்  தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒரு டோஸ் மட்டும் போட வேண்டிய தடுப்பூசியாகும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசியும் அங்கு தயாரிக்கப்பட்டு வருகிறது. எமர்ஜென்ட்  பயோசொல்யூஷன்ஸ் என்ற மருந்து நிறுவனம் இந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிலையில், நிறுவனப் பணியாளர்கள் சிலரின் தவறால் இந்த இரண்டு தடுப்பூசிகளின் வேதிப்பொருட்களும் ஒன்றாக கலந்து விட்டதாக கூறப்படுகிறது.  […]

Continue Reading

அதிகரிக்கும் கொரோனா – நாடு முழுவதும் 53,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 53 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையையும் சேர்த்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே இருபத்துஒன்றரை லட்சத்தை நெருங்குகிறது. வைரஸ் தொற்று பாதித்த 5 லட்சத்து 52 ஆயிரத்து 566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 354 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை 6 கோடியே 30 லட்சத்து 54 […]

Continue Reading

இந்தியாவில் இதுவரை 5.08 கோடிப் பேருக்கு கொரோனா தடுப்பூசி..!

இந்தியாவில் ஐந்து கோடிக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜனவரி 16ஆம் நாள் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று மாலை வரை மொத்தம் 5 கோடியே 8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் புதிதாக 47 ஆயிரத்து 262 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 68 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளது.

Continue Reading

70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முகக் கவசம் அணிவதை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் தகுதியானவர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் முகக் கவசத்தை சரியான முறையில் அணிய வேண்டும்

Continue Reading

இந்தியாவில் புதிதாக 46,951 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிர்ச்சியில் தமிழகம்

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 46 ஆயிரத்து 951 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி நாட்டில் தற்போதைய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 34 ஆயிரத்து 646 ஆக உள்ளது. மகாராஷ்டிரத்தில் நேற்று ஒரேநாளில் 30 ஆயிரத்து 535 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 10 ஆயிரத்து 120 […]

Continue Reading

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா அதிகரிப்பு புதிதாக 35,871 பேருக்கு தொற்று அச்சத்தில் மக்கள் !

இந்தியாவில் புதனன்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 871ஆக அதிகரித்துள்ளது.தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 52 ஆயிரத்து 364 ஆக உயர்ந்துள்ளது. அதிக அளவாக மகாராஷ்டிரத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 179ஆகவும், தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 760 ஆகவும் உள்ளது.  குஜராத்தின் அகமதாபாத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசுப் பேருந்துப் போக்குவரத்து இன்று முதல் […]

Continue Reading