கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு புதிதாக ஆர்டர் எதுவும் தரவில்லையா?

கொரோனா தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு புதிதாக ஆர்டர் எதுவும் கொடுக்கவில்லை என, இந்தியாவில் இருந்து இயங்கும் வெளிநாட்டு கைக்கூலி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், சீரம் இந்தியா நிறுவனத்திடம் 100 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளுக்கும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் 20 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளுக்கும் கடைசியாக கடந்த மார்ச் மாதம் ஆர்டர் கொடுக்கப்பட்டதாக அந்த செய்திகள் கூறுகின்றன. இந்த செய்தி முற்றிலும் தவறானது மற்றும் அடிப்படை ஆதாரம் அற்றது என தற்போது தெரிய வந்துள்ளது. உலகில், இந்திய […]

Continue Reading

கோவிட் – தொலைந்த உண்மைகளும், திசை தவறிய விவாதங்களும் ~எஸ்.குருமூர்த்தி

தற்போது மருத்துவமனைகளின் விநியோகத் தொடர்களில் தோன்றியுள்ள இடையூறுகளுக்கு அரசே காரணம் என்று உரத்து ஒலிக்கும் குரல்கள், முக்கியமான உண்மைகளைக் கண்டு கொள்ளவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு, பிப்ரவரி 15 அன்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், “இந்திய மாவட்டங்களில் ஐந்தில் ஒரு பங்கில் கடந்த ஏழு நாட்களாக கோவிட் -19 பாதிப்புகள் ஏதும் பதிவாகவில்லை. ஏறுமுகமாக இருந்த நோய்த்தொற்று ஏற்ற இறக்கமின்றி சீராக உள்ளது.” என்று அறிவித்தார். கடந்த ஆண்டு 90,000 என்று இருந்த […]

Continue Reading

சீன வைரஸ் கொரோனா தடுப்பூசி விலை 25% குறைப்பு

சீன வைரஸ் கொரோனா நோயின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர், பல லட்சம் மக்கள் மருத்துவமனையில் அவதியுறுகின்றனர். உலகமே கொரோனா நோயிலிருந்து விடுபட தடுப்பூசி மருந்துகளை தயாரித்து வருகின்றன. பாரத தேசத்தில் கோவிஷீல்டு, கோவேக்சின் என இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. கோவிஷீல்டு மருந்தை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய தொகுப்பிற்கு 50 சதவீதம் போக மீதமுள்ள 50 சதவீத மருந்துகளை மாநில அரசுகள் மற்றும் வெளிச்சந்தையில் (தனியார்) […]

Continue Reading

கொரோனா சிகிச்சைக்காக உதவி செய்யும் ஆன்றோர்கள் – ஈஷா சத்குரு

சீனா நாட்டில் இருந்து பரப்பப்பட்ட உயிர் கொல்லி நோயான கொரோனா, பல லட்சக் கணக்கான உயிர்களை கொன்று குவித்து வருகிறது. உலகம் முழுவதும் இதன் கொடுமையை அனுபவித்து வரும் நேரத்தில், இதற்கான தடுப்பூசியை போட கூடாது என்று சொல்பவர்களும், இந்தியா தயாரித்த தடுப்பூசியை போட கூடாது என்று சொல்பவர்களும், இந்தியாவில் கொரோனா நோய் தொற்றை ஒழுங்காக தடுக்க மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டது என்றும் பல எதிர்மறை பிரச்சாரங்களை பரப்பி கொண்டு வரும் வேளையில், ஈஷா […]

Continue Reading

சடலங்களின் வணிகர்கள்

எப்போது ஒரு கொடிய நோய் இந்த உலகை தாக்கும், நாம் எப்போது ஒரு மருந்தை தயாரித்து கோடிகளில் சம்பாதிக்கலாம் என மேற்கத்திய மருத்துவ வணிக நிறுவனங்கள் கழுகு போல காத்துக் கொண்டிருக்கும். பிணங்களின் எண்ணிக்கையை வைத்து, அந்த தடுப்பூசி மருந்தின் விலையை கூட்டி விடுவர். 1990ல், குழந்தைகளுக்கு ஹெபடிடிஸ்-பி (Hepatitis -B) தடுப்பூசி கட்டாயம் போடப்பட வேண்டும், இது எய்ட்ஸை விட ஆபத்தானது என்று அறைகூவல் விடுத்தனர். 2 ரூபாய்க்கு கிடைக்க வேண்டிய அந்த ஊசி, அப்போது […]

Continue Reading

குறைந்த கொரோனா, வேகமெடுக்கும் தடுப்பூசி – ராதாகிருஷ்ணன் அறிக்கை

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் கோவிட் தொற்று அதிகரிக்கும் வேகம் சற்று குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தண்டையார்பேட்டையில் கொரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் கொரோனா அதிகரிக்கும் வேகம் குறைந்துள்ளது என்று கூறினார். கூடுதலாக 12 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகளை தயார் செய்ய உள்ளதாகவும், அதில் முதற்கட்டமாக இந்த வார இறுதிக்குள் 2000 ஆக்சிஜன் படுக்கைகள் […]

Continue Reading

முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை வந்தடைந்தது

மூன்று டேங்கர்களில் திரவ மருத்துவ ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு குஜராத்தில் உள்ள ஹாப்பாவில் இருந்து 2021 ஏப்ரல் 25 அன்று மாலை 6.03 மணிக்கு கிளம்பிய ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், மகாராஷ்டிராவில் உள்ள கலம்பொலியை 2021 ஏப்ரல் 26 காலை 11:25 மணிக்கு வந்தடைந்தது. ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் வேகமாக வந்தடைவதற்காக பசுமை வழித்தட வசதி வழங்கப்பட்டது. ரயில்வே அமைச்சகத்தால் இயக்கப்படும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலமாக நாடு முழுவதும் உள்ள கொவிட்-19 நோயாளிகளின் சிகிச்சைக்காக மருத்துவ ஆக்சிஜன் எடுத்துச் […]

Continue Reading

சீன வைரஸ் – புதிய வழிகாட்டுதல்களை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சீன வைரஸ் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கத்தின் காரணமாக புதிய வழிகாட்டுதல்களுக்கு ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு, ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கோவிட்-19 நோயாளிகளுக்காகவும், கோவிட்-19 பெருந்தொற்றின் போது சுய பராமரிப்புக்கான ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவ நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுய பராமரிப்பு மற்றும் வீட்டு மேலாண்மை நடவடிக்கைகள் மீது இந்த வழிகாட்டுதல்கள் பெரிதும் கவனம் செலுத்தியுள்ளன. பண்டைய […]

Continue Reading

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை: அர்ஜுன் சம்பத் கோரிக்கை!

கொரோனா பெருந் தொற்றில் பொது மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் அல்லல்படும் வேளையில், நக்சல் அமைப்புக்களும் கிறிஸ்தவ மிஷனரிகளும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன . இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் திரு அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளதாவது : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா நிறுவனம் மனித உயிர்களை காப்பாற்ற நாள்தோறும் 1000 மெட்ரிக்டன் ஆக்சிஜன் இலவசமாக உற்பத்தி செய்து தர முன்வந்துள்ளது . அதற்கான கட்டமைப்பும் ,தொழில் நுட்பதிறனும் , […]

Continue Reading

கொரோனா தொற்று – RSS அகில பாரத பொதுச்செயலாளர் ஸ்ரீ தத்தாத்ரேயா ஹோஸபாலே வேண்டுகோள்

நம் நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் மிகப்பெரிய சவாலாக எழுந்துள்ளது. தொற்றின் வேகமும், தீவிரமும் இம்முறை கடுமையாக உள்ளது. நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகப்படியான மக்கள் தொற்றுக்கு ஆளாகி, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் அன்பானவர்களை இழந்துள்ள. இந்த பேரிடரால் பாதிக்கப்பட்ட இவர்கள் அனைவருக்கும் ஆர்.எஸ்.எஸ். தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறது என RSS ன் அகில பாரத பொதுச்செயலாளர் ஸ்ரீ தத்தாத்ரேயா ஹோஸபாலே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் […]

Continue Reading