வஞ்சிக்கப் படுகிறதா தமிழகம்?

மத்திய பாஜக அரசு, மிகவும் குறைவான தடுப்பூசிகளையே, தமிழகத்திற்கு வழங்குகின்றது என, மாநில திமுக அரசு மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனது. மத்திய அரசு சரியான முறையில், அனைவருக்கும், எல்லா மாநிலத்திற்கும், சரி சமமாகவே, தடுப்பூசி வழங்கி வருகின்றது. ஆனால், தொடர்ந்து மத்திய அரசை, திமுகவினர் குற்றம் சொல்வதற்கு காரணம் என்ன? என்பதை பார்க்கும் போது, தங்களுடைய தவறை மறைக்க, மற்றவர்கள் மீது பழி போட்டு தப்பிக்க முயல்கின்றனர், என்ற எண்ணமே ஏற்படுகின்றது. குறைவான […]

Continue Reading

நாடகக் காதல் படுகொலைகள் – ஓய்வில் இருக்கும் ஸ்டாலின்

உளுந்தூர்பேட்டையில், திருமணம் செய்ய மறுத்ததால், நாடகக் காதல் கும்பலால் திமுக கட்சி தொண்டர் வீரமணியின் 18 வயது மகள் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கலோ கண்டனமோ தெரிவிக்கவில்லை. காரணம் கேட்டால் அவர் குடும்பத்துடன் கொடைக்கானலில் ஓய்வு எடுத்து வருவதாகவும், தற்போது அவர் அரசியல் கருத்துக்களை கூற மாட்டார் என்றும் திமுகவினர் தெரிவிக்கின்றனர். ஆனால், இதே போன்று அரக்கோணத்தில் இரண்டு பட்டியலின இளைஞர்கள், அவர்களுக்குள்ளான சண்டையில் கொலை செய்யப்பட்டதற்காக, அது சாதீய கொலை, அரசியல் […]

Continue Reading

திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

திமுக எம்.பி.யும், அக்கட்சியின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், நேற்று திருச்சியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய எம்.பி.கனிமொழிக்கு லேசான அறிகுறிகள் இருந்ததின் பேரில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading

கோவையில் இன்று ஒரே நாளில் முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்..!

கோவையில் இன்று ஒரே நாளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரச்சாரம் செய்ய உள்ளதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை நீலகிரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து பிற்பகல் 3 மணிக்கு கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க மற்றும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். அதனை தொடர்ந்து ஈரோடு, நாமக்கல் […]

Continue Reading

அனல் பறக்கும் பிரச்சாரம்..! அரசியல் கட்சி வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் மக்களுடன் இறகு பந்து விளையாடி வாக்கு சேகரிப்பு சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் பொதுமக்களுடன் இறகு பந்து விளையாடி வாக்கு சேகரித்தார். கொண்டிதோப்பு பகுதியில் உள்ள சிவஞானம் பூங்காவிற்கு சென்ற அவர், மக்களுடன் இறகு பந்து விளையாடியும், புகைப்படம் எடுத்துக்கொண்டும் பிரச்சாரம் செய்தார். அதைத்தொடர்ந்து அதேபகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்ற அவர் ஆதரவாளர் ஒருவருக்கு டீ போட்டு கொடுத்து பாஜகவிற்கு ஆதரவு திரட்டினார். ”குழாய் […]

Continue Reading

நில அபகரிப்புக்கு முற்றுப்புள்ளி – முதலமைச்சர்

திமுக ஆட்சிக் காலத்தில் பறிக்கப்பட்ட 14,000 ஏக்கர் நிலங்களை அப்பாவிகளுக்கு மீட்டுக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ அதிமுகவை ஆதரிக்குமாறு கூறி பிரச்சாரம் செய்தார்.  மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து, ஒத்தக்கடையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். வியாபாரிகள் அனைவரும் நிம்மதியாக தொழில் செய்யும் மகிழ்ச்சியான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். மின்துறையில் தனிக் கவனம், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு காரணமாக பெரிய […]

Continue Reading

நெருங்கும் தேர்தல்… சூடு பிடிக்கும் பிரச்சாரம்..!

தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் மாநிலம் முழுவதும் அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தொகுதிகள் தோறும் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி திருவெறும்பூர் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வாக்கு சேகரிப்பு பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள கனிமொழி, திமுக ஆட்சிக்கு வந்ததும் அவற்றின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என […]

Continue Reading

ஊர்ந்து சென்றல்ல, நடந்து சென்றுதான் முதலமைச்சர் பதவி ஏற்றேன்: எடப்பாடி பழனிசாமி பதிலடி

ஊர்ந்து போய் முதலமைச்சர் பதவி வாங்க தான் என்ன பாம்பா? பல்லியா? என என கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, ஊர்ந்து சென்றல்ல, நடந்து சென்றுதான் முதலமைச்சர் பதவியை  ஏற்றதாக மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் புவனகிரியில், அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக ஆட்சியில் இழந்த காவிரி உரிமையை மீட்டுக் கொடுத்தது அதிமுக அரசு என்று குறிப்பிட்ட முதலமைச்சர், தான் விவசாயி என்று கூறினால் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது என்று […]

Continue Reading

தமிழகம் முழுவதும் களைகட்டியது சட்டப்பேரவை தேர்தல் திருவிழா..! காலை முதலே வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு வேட்டை

சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார், அங்குள்ள காமாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தியதோடு, சைக்கிள் ரிக் ஷாவை ஓட்டி வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வழி நெடுகிலும் பொது மக்கள் மலர் தூவி அமைச்சர் ஜெயக்குமாருக்கு வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி அடித்ததாக கூறுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முத்துராஜா, புதுக்குளம் […]

Continue Reading

திமுக ஒரு கார்ப்பரேட் கிரிமினல்

சமீபத்தில்  தமிழகத்தில் இரு கழகத்தின் தலைவர்கள்  தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். தடுப்பூசி எல்லோரும் போடுவதுதானே, அதில் சுவாரசியம் ஒன்றுமில்லை என்று நினைக்க தோணலாம். ஆம் சுவாரசியம் இல்லை, ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்ட இடம் இங்கு உற்றுநோக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.உண்மை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்விளம்பரம் காவேரி கார்ப்பரேட் மருத்துவமனையில். முதல்வர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டு கொண்டதால், பணமில்லாத ஏழைகளும்  நம் முதல்வரே அரசாங்க மருத்துவமனையில் போட்டு கொண்டிருக்கிறார்! நாமும் போட்டுக் கொள்வோம் என்ற விழிப்புணர்வை எளிய […]

Continue Reading