தேர்தலுக்கு பின் சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாகும்.! கசப்பான அனுபவத்தை மக்கள் ஏற்க ஆணையர் கோரிக்கை

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும், அந்த கசப்பான அனுபவத்தை, மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரகாஷ் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம், சென்னை மெரினாவில் தனியார் பள்ளி மாணவர்கள் வடிவமைத்த மணற் சிற்பத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Continue Reading

தேர்தல் திருவிழா..! மின்னல் வேகத்தில் வேட்பாளர்கள் பிரச்சாரம்…

தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தொகுதிகள் தோறும் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மாவட்டந்தோறும் பெண்கள் பாதுகாப்பிற்காக தனி நீதிமன்றம் – திமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி எம்.பி கனிமொழி வாக்கு சேகரிப்பு பண்ருட்டியில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை ஆதரித்து கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழக வேலைவாய்ப்புகளை வெளிமாநிலத்தவர்கள் […]

Continue Reading

சட்டமன்ற தேர்தலுக்கான தபால் ஓட்டு சென்னையில் பணி துவக்கம்

சென்னையில் சட்டமன்ற தேர்தலுக்கான தபால் ஓட்டு பெறும் பணி துவங்கியது அண்ணா நகர்: அண்ணா நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தபால் ஓட்டு பெறும் பணி துவக்கம் அண்ணா நகர் தொகுதியில் 586 தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து தபால் ஒட்டுக்களை பெறுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளன எழும்பூர்: எழும்பூர்  சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகள் பெறப்படுகின்றன அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து தபால் வாக்குகளை பெற்று வருகின்றனர் எழும்பூர் தொகுதியில் […]

Continue Reading

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் தினத்தன்றும், தேர்தல் தேதிக்கு 72 மணி நேரத்துக்கு முன்பும் பைக் பேரணிக்கு தடை

தேர்தல் தினத்தன்றும், தேர்தல் தினத்துக்கு முன்பாகவும், வாக்காளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்த, சில இடங்களில் சமூக விரோதிகள் சிலர் , பைக்குகளை பயன்படுத்துகின்றனர் என தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம்,  தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும், தேர்தல் தேதி அன்று அல்லது தேர்தல் தேதிக்கு 72 மணி நேரம் முன்பாக, பைக் பேரணிகளை அனுமதிக்க கூடாது என முடிவு செய்துள்ளது.  இது தொடர்பான அறிவுறுத்தல்கள், தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளம் https://eci.gov.in -லும் இந்த […]

Continue Reading

பின்தங்கிய மேற்குவங்கம் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் தொழில் வளர்ச்சிக்கும், நீர்ப் பாசனத்துக்கும் இடதுசாரி, திரிணாமூல் காங்கிரஸ் அரசுகள் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தின் புரூலியாவில் பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஒரு காலத்தில் நீர்வளம் மிக்கதாக இருந்த புரூலியாவில் இப்போது வறட்சி நிலவுவதாகக் குறிப்பிட்டார். முதலில் இருந்த இடதுசாரி அரசும், இப்போதுள்ள திரிணாமூல் காங்கிரஸ் அரசும் மேற்கு வங்கத்தில் தொழில்வளர்ச்சிக்கும் நீர்ப்பாசனத்துக்கும் திட்டங்களை நிறைவேற்றவில்லை எனத் […]

Continue Reading

திமுக ஆட்சிக்கு வந்தால் குவாட்டர் ஃப்ரீ! – வாக்குறுதி குடுக்க முடியும் வைரலாகும் பேச்சு!

மிகமோசமான ஊழல் ஆட்சியை நடத்தியதால், கடந்த பத்தாண்டுகளாக திமுகவால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை! இந்நிலையில் தற்போது எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று தவியாய் தவிக்கிறது திமுக! இதற்காக என்ன பொய்யை வேண்டுமானாலும் அடித்துவிடத் தயாராக உள்ளது! சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகச் சுற்றிவருகிறது. அது ஒரு திமுக பிரச்சார மேடை. அந்த கூட்டத்தில் பேசும் திமுக நிர்வாகி ஒருவர், பெட்ரோல் விலை குறித்து பேசிய அடுத்த நிமிடமே குவாட்டர் மது பானத்தின் […]

Continue Reading

அதிமுக கூட்டணியில் தேமுதிக கேட்ட தொகுதிகள் எத்தனை? – தேமுதிக மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதி விளக்கம்

தேமுதிக மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதி செய்தியாளர் சந்திப்பு அதிமுகவுடன் தொடர்ந்து தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எத்தனை தொகுதி வேண்டும் என்று அதிமுகவிடம் தெளிவாக கூறியுள்ளோம் எத்தனை தொகுதிகள் வழங்க இயலும் என்று அதிமுக தேமுதிகவிடம் எடுத்துக்கூறியுள்ளது இருவருக்கும் இணக்கமான எண்ணிக்கையை எட்ட தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது அதிமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது 41 தொகுதிகளை கேட்டோம் அடுத்த இரண்டு நாட்களில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவிற்கு வரும் என்று நம்புகிறோம் மாநிலங்களவை எம்பி பதவியை தேமுதிக கோரியது, தருவதாக […]

Continue Reading

இது வேறமாறி தேர்தல் – ஓட்டு போட்டா வீட்டுக்கு ஒரு ஆக்டிவா பிளஸ், மட்டன் பிரியாணி…!

சட்டமன்ற தேர்தலை மிஞ்சும் வகையில், வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம், பட்டு வேட்டி-சேலை, தையல் எந்திரங்கள் வழங்குவதாக கவர்ச்சிகரமான வாக்குறுதி அளித்து நெல்லை டயோசிசன் தேர்தலுக்கான வாக்கு வேட்டை நடந்து வருகிறது. மாதம் ஒரு முறை மட்டன் பிரியாணி வழங்குவது உள்ளிட்ட இலவச அறிவிப்புகளை அள்ளித் தெளித்த வேட்பாளர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டலத்திற்குட்பட்ட ஊர்களில் இருந்து பெருமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 7ஆம் தேதி நடக்கிறது. திருநெல்வேலி திருமண்டலத்தில் […]

Continue Reading

சூடுபிடிக்கும் சட்டமன்ற தேர்தல்… தமிழகம் வருகிறார் இந்திய தேர்தல் ஆணையர்

சட்டமன்ற தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வருகிற 10-ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் வருகிறார். தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் வந்திருந்தனர். இந்த நிலையில், வருகிற 10-ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் […]

Continue Reading