தற்சார்பு இந்தியாவின் ஆறு முக்கிய தூண்களுள் சுகாதாரமும் நல்வாழ்வும் !..
அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-இல் சுகாதாரம், நல்வாழ்விற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இவை தற்சார்பு இந்தியாவின் அடித்தளமாக அமைகிறது. சுகாதாரம், நல்வாழ்விற்கு 137 சதவீத நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற ஜல் ஜீவன் இயக்கம் துவங்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி 4,378 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 2.86 கோடி வீடுகளுக்கு தண்ணீர் இணைப்புகள் வழங்கப்படுவதுடன், அம்ருத் என்று அழைக்கப்படும் புத்துயிர் மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான […]