தேர்தலுக்கு பின் சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாகும்.! கசப்பான அனுபவத்தை மக்கள் ஏற்க ஆணையர் கோரிக்கை

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும், அந்த கசப்பான அனுபவத்தை, மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரகாஷ் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம், சென்னை மெரினாவில் தனியார் பள்ளி மாணவர்கள் வடிவமைத்த மணற் சிற்பத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Continue Reading

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு : மீண்டும் ஊரடங்கா …? டாஸ்மாக் பார், திரையரங்குகளை மூடக் கோரி வழக்கு

கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், டாஸ்மாக் பார், திரையரங்குகள், வழிபாட்டு தலங்களை மூடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவில், கடந்த பிப்ரவரிக்கு பின் வைரஸ் தொற்று பரவல் 4.5 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்க, டாஸ்மாக் பார்கள், திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள், விளையாட்டு மைதானங்களை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு […]

Continue Reading

கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றால் ஊரடங்குக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கும் என்றே தாம் நினைப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். சென்னை ஆவடி பகுதியில் அதிமுக சார்பில் தேர்தல் பணிமனையை திறந்துவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அதிகாரிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரிடம் கலந்து பேசி முதலமைச்சர் முடிவுகளை எடுப்பார் என்றார்.

Continue Reading

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா ? அதிர்ச்சியில் மக்கள்

மீண்டும் ஊரடங்கு என பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்தியாவில் 19 மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று ஏறுமுகமாக உள்ளதாகவும் இந்த மாநிலங்களில் தமிழகமும் அடங்கும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு 1000 பேர் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கடந்த பிப்ரவரி மாதத்தில் திருமணங்கள், […]

Continue Reading

நாக்பூரில் இன்று முதல் ஒருவாரம் முழு ஊரடங்கு

மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இன்று முதல் ஒருவாரக்காலத்துக்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. மார்ச் மாதத்தின் 14 நாட்களில் மட்டும் நாக்பூரில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக இரண்டாயிரத்து 252 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க இன்று முதல் ஒருவாரக் காலத்துக்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் சாலைகள் இன்று வாகனங்கள் இயக்கமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. பால்பொருட்கள், […]

Continue Reading

பள்ளிக்கு வரும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கு வரும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் முதலிபாளையத்தில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளியை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்து அதிமுக அரசு வரலாறு படைத்துள்ளதாக கூறினார். தமிழகத்தில் பள்ளிகள் படிப்படியாகவே திறக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் எனக் குறிப்பிட்டார்.

Continue Reading