நடிகை கீர்த்தி சுரேஷ்- அனிருத் இடையே காதலா?
நடிகை கீர்த்தி சுரேசும், இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக இணையதளங்களில் பரவிவரும் தகவல் வெறும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. அனிருத்தின் பிறந்த நாளன்று அவருடன், எடுத்துக்கொண்ட புகைப்படங்களுடன் நடிகை கீர்த்தி சுரேஷ், வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அதன்பின் அனிருத்தும், கீர்த்தியும் காதலிப்பதாகவும், இந்த ஆண்டே இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் அனிருத்தும் கீர்த்தி சுரேஷும் நல்ல நண்பர்கள் என்றும், இருவரும் காதலிப்பதாக வெளியான செய்தி வெறும் வதந்தி எனவும் தெரியவந்துள்ளது.