அனல் பறக்கும் பிரச்சாரம்..! அரசியல் கட்சி வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் மக்களுடன் இறகு பந்து விளையாடி வாக்கு சேகரிப்பு சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் பொதுமக்களுடன் இறகு பந்து விளையாடி வாக்கு சேகரித்தார். கொண்டிதோப்பு பகுதியில் உள்ள சிவஞானம் பூங்காவிற்கு சென்ற அவர், மக்களுடன் இறகு பந்து விளையாடியும், புகைப்படம் எடுத்துக்கொண்டும் பிரச்சாரம் செய்தார். அதைத்தொடர்ந்து அதேபகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்ற அவர் ஆதரவாளர் ஒருவருக்கு டீ போட்டு கொடுத்து பாஜகவிற்கு ஆதரவு திரட்டினார். ”குழாய் […]

Continue Reading

கரூரில் ம.நீ.ம பொருளாளரோடு வர்த்தக தொடர்புடைய நிறுவனங்களில் ஐடி ரெய்டு: 5 இடங்களில் நடைபெறும் சோதனையில் 5 கோடி ரூபாய் பறிமுதல்

கரூரில் ஏற்றுமதி மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்புடைய 5 இடங்களில் வருமான வரித்துறை சோதனை 2ஆவது நாளாக நடைபெற்று வரும் நிலையில், கணக்கில் வராத ரொக்கம் 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூரில் டெக்ஸ் யார்டு, யூனிட்டி எக்ஸ்போர்ட், குளோபல் நிதி நிறுவனம் மற்றும் பிரகாஷ், மாரியப்பன் எனும் 2 ஃபைனான்சியர்கள் தொடர்புடைய இடங்களில் நேற்று முதல் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, கோவை, மதுரை, சேலம், ஈரோடு […]

Continue Reading

தமிழகம் முழுவதும் களைகட்டியது சட்டப்பேரவை தேர்தல் திருவிழா..! காலை முதலே வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு வேட்டை

சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார், அங்குள்ள காமாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தியதோடு, சைக்கிள் ரிக் ஷாவை ஓட்டி வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வழி நெடுகிலும் பொது மக்கள் மலர் தூவி அமைச்சர் ஜெயக்குமாருக்கு வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி அடித்ததாக கூறுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முத்துராஜா, புதுக்குளம் […]

Continue Reading