பிரபல ஹீரோவுடன் நடிக்க போகும் ஷிவாங்கி!
சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது துறுதுறு பேச்சு மற்றும் வெள்ளந்தி மனதினால் பலரது இதயங்களை கட்டிப்போட்டவர் ஷிவாங்கி. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஷிவாங்கி நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இணைந்துள்ளார். இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். […]