பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 9-வது நாளாக உயர்வு
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 9-வது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து 91 ரூபாய் 68 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் இதுவரை இல்லாத அளவாக லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து 85 ரூபாயைக் கடந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்து வருவதால், எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.