ரயில் நிலைய பிளாட்பாரம் டிக்கெட்டுகளின் விலை 50 ரூபாய் வரை உயர்வு காரணம் என்ன..?

ரயில் நிலைய பிளாட்பாரம் டிக்கெட்டுகளின் விலை 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மண்டல மேலாளர்களே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு கூட்டம் கூடுவதை தடுக்கவே இந்த கட்டண உயர்வு என்றும், இதுஒரு தற்காலிக நடவடிக்கை என்றும் ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த மாதம் குறுகிய தூர பயணிகள் ரயில்களின் டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்பட்டது. அப்போதும் மக்களின் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவே கட்டண உயர்வு என்று ரயில்வே நிர்வாகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading