இரவு நேரங்களில் ரயில்களில் செல்போன்கள் சார்ஜ் செய்யத் தடை

ரயில்களில் இனி இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியாது. விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, ரயில் பெட்டிகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன் சார்ஜிங் பாயிண்டுகள் அணைத்து வைக்கப்பட வேண்டும் என்று ரயில் பாதுகாப்பு ஆணையர் பரிந்துரைத்தார். ரயில்வே வாரியத்தின் அறிவுறுத்தல் படி மேற்கு ரயில்வே நிர்வாகம், குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜிங் பாயிண்டுகளுக்கான […]

Continue Reading

கொரோனா பரவல் அதிகரிப்பதால் ரயில்களை 100 சதவீதம் இயக்க உத்தரவிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்குமாறு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கொரோனா ஊடரங்கால் கடந்த மார்ச் முதல் ரத்து செய்யப்பட்ட ரயில் போக்குவரத்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 65 சதவிகிதம் அளவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் 100 சதவிகிதம் இயக்க உத்தரவிடவேண்டும் என பொதுநல வழக்கு தாக்கலானது. இதை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனிமனித விலகல் உள்ளிட்ட விதிகளை  புறநகர் ரயில்களில் அவற்றை […]

Continue Reading

ரயில் நிலைய பிளாட்பாரம் டிக்கெட்டுகளின் விலை 50 ரூபாய் வரை உயர்வு காரணம் என்ன..?

ரயில் நிலைய பிளாட்பாரம் டிக்கெட்டுகளின் விலை 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மண்டல மேலாளர்களே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு கூட்டம் கூடுவதை தடுக்கவே இந்த கட்டண உயர்வு என்றும், இதுஒரு தற்காலிக நடவடிக்கை என்றும் ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த மாதம் குறுகிய தூர பயணிகள் ரயில்களின் டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்பட்டது. அப்போதும் மக்களின் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவே கட்டண உயர்வு என்று ரயில்வே நிர்வாகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading