சீன விண்கலத்தின் கழுகுப் பார்வையில், 22 லட்சம் கி.மீ. தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட செவ்வாய் கோளின் புகைப்படம்..!

சீனாவின் தியான்வென்-1 விண்கலம், செவ்வாய் கோளை 22 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலிருந்து எடுத்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூலையில் அனுப்பப்பட்ட இந்த விண்கலம் பல கோடி கிலோமீட்டர்கள் பயணத்திற்கு பிறகு வரும் 10ஆம் தேதி செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் நுழைகிறது. லேண்டர், ரோவர், ஆர்ப்பிட்டர் என மொத்தம் 5 டன் எடை கொண்ட இந்த விண்கலம் எடுத்துள்ள செவ்வாயின் கறுப்பு-வெள்ளை புகைப்படம், அந்த கிரகத்தின் தரை அமைப்புகளை கழுகுப்பார்வையில் காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Continue Reading