வரும் சட்டப்பேரவை தேர்தலில் 3ஆவது அணி உருவாகும் – டி.ராஜேந்தர் பரப்பரப்பு பேட்டி

தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், வரும் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும் என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும், 8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் டி.ராஜேந்தர் தலைமையில், முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நினைவிடத்தில் கோரிக்கை மனு வைத்து வழிபட்டனர்.

Continue Reading