கூட்டணி குழப்பங்கள் – தலை கவிழும் திமுக
தொகுதிப் பங்கீட்டை அதிமுக சற்றேறக்குறைய சுமூகமாகவே முடித்துவிட்டது. பாமக, பாஜக, தமாகா தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக வழக்கம்போல இழுபறியில் உள்ளது. இதன்பிறகு சிறு கட்சிகளுக்கு ஒரு சில இடங்கள் ஒதுக்கப்படலாம். சசிகலாவுடன் நேரடியாக எந்த ஒரு உடன்படிக்கையும் எட்டப்படாத சூழ்நிலையில், சசிகலா ஆதரவாளர்களில் 10 முதல் 15 நபர்களுக்கு இரட்டை இலையில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன. திமுக கூட்டணியை பொருத்தவரையில் காங்கிரஸ் கட்சியை கழட்டிவிட வேண்டும் என்று […]