பொய்யான செய்தி வெளியிட்ட ஊடகம்.!நிரூபிக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.!

பாஜக துணை தலைவர் அண்ணாமலை IPS அவர்கள் பற்றி தொடர்ந்து அவதூறு மற்றும் பொய் செய்திகள் திட்டமிட்டு வெளியிடப்பட்டு வருகிறது, அண்ணாமலை IPS அரசியலுக்கு வந்த உடன் தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார், இது தமிழக பாஜகவுக்கு நாளுக்கு நாள் வளர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் எதிர்கட்சிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது, இந்நிலையில் திட்டமிட்டு அண்ணாமலை IPS மீது அவதூறு மற்றும் பொய் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

அண்ணாமலை IPS பெயரில் போலியான சமூக வலைதள கணக்கு தொடங்கி அவர் பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் தவறான கருத்துக்களை பதிவு செய்வது போன்ற செய்யலில் சிலர் திட்டமிட்டு செய்து வருகின்றனர், இந்நிலையில் சமீபத்தில் அண்ணாமலை IPS திமுகவுடன் புதிய கல்வி கொள்கை குறித்து நேருக்கு நேர் விவாதம் நடத்த தாயார் என சவால் விடுத்தார், அதற்கு தர்மபுரி திமுக எம்பி செந்தில் குமார் சவாலை ஏற்பதாக தெரிவித்தார்.

உடனே ஆறு தேதிகளை வெளியிட்டு இதில் ஒரு தேதியை தேர்வு செய்ய திமுக எம்பி செந்தில்குமாரை வலியுறுத்தினார், ஆனால் செந்தில்குமார் சவாலில் இருந்து பின்வாங்கினர், இதனை தொடர்ந்து அண்ணாமலை IPS அவர்களின் இமேஜ் மக்கள் மத்தியில் மேலும் கூடியது, மேலும் திமுகவின் செல்வாக்கு சரிவை நோக்கி சென்றது, இதனை தொடர்ந்து அண்ணாமலை IPS குறித்து தவறான செய்தியை வெளியிட்டு தனியார் ஊடகம் ஓன்று மக்களை குழப்ப முயற்சித்த சம்பம் நடந்துள்ளது.

இந்த தனியார் ஊடகம் இரு தினங்களுக்கு முன் நடிகர் அஜித் குமார் குறித்து சர்ச்சைக்குரிய புகைப்படம் வெளியிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கியது, இதனால் அந்த ஊடகத்துக்கு எதிராக அஜித் ரசிகர்கள் இந்தியா அளவில் டிவீட்டரில் ஹாஸ்டக் ட்ரெண்ட் செய்தது அந்த ஊடகத்துக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது, இதனை தொடர்ந்து தற்போது அண்ணாமலை IPS குறித்து பொய்யான செய்தி வெளியிட்டுள்ளது, அதில் எனக்கு ராஜ்யசபா பதவி கொடுத்தால் மகிழ்ச்சியாக ஏற்று கொள்வேன் என்று.

அண்ணாமலை IPS கூறியதாக செய்தி வெளியிட்டிருந்தது.இதற்கு அண்ணாமலை IPS இது ஆதாரமற்ற செய்தி, இந்த செய்தி குறித்து ஆதாரத்தை அந்த ஊடகம் வெளியிட வேண்டும். இல்லையெனில் சட்டப்படி வழக்கு பதிவு செய்வேன் என பொய் செய்தியை வெளியிட்ட ஊடகத்துக்கு எச்சரிக்கை விடுத்தார் அண்ணாமலை IP. இதனையெடுத்து ஏற்கனவே அஜித் ரசிகர்களிடம் பெருத்த அடிவாங்கிய அந்த ஊடகத்துக்கு மேலும் ஒரு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் தோல்வியை சந்தித்து வரும் பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகம்.!ஸ்டாலினை வைத்து காமெடி செய்கிறாரா.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *