அப்பாவி பிள்ளைகளை உசுப்பேத்தி அவர்கள் தற்கொலைக்கு இவர்கள் தான் காரணம்.!மத்திய அமைச்சக ஆலோசகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

நீட் தேர்வில் மாநில பாட திட்டத்தில் இருந்தே அதிக கேள்வி கேட்டகப்பட்டுள்ளதாக கல்வி துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர், இது நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் செய்யும் அரசியல் கட்சி தலைவர்கள், புதிய திரைப்படங்களை விளம்பரம் செய்வதற்காக தொடர்ந்து எட்டு படத்தை தோல்வி படமாக கொடுத்த தோல்வி பட நடிகர்கள், ஆகியோருக்கு பெரும் இடியாக விழுந்துள்ளது, இந்நிலையில் இந்த தகவலை மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்துள்ள மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரின் ஊடக ஆலோசகர் அமர் பிரசாத் ரெட்டி,

தேர்வில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளும் தமிழக அரசு பாடத்திட்டத்தில் இருப்பது உறுதியானது. இழிவான அரசியல் செய்வது திமுகவினருக்கு கை வந்த கலை. இதுல நடிகர்கள் வாயிலாக தவறான கருத்தை வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். சுமார் 70 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு சேர்ந்த பிள்ளைகளை உயர்கல்வியை கிடைக்காமல் செய்துவிட்டனர். இப்பொழுது அதை மூடிமறைக்க அப்பாவி பிள்ளைகளை உசுப்பேத்தி அவர்கள் தற்கொலை செய்வதற்கு இவர்கள் தான் காரணம்.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு எதிரான ஒரு கட்சி இருப்பது என்றால் அது திமுக கட்சி தான் என்பது உறுதியாக என்னால் சொல்ல முடியும். அதிலும் ஸ்டாலின் அவர்கள் ஜாதி வெறியை தூண்டிவிட்டு அதில் அரசியல் செய்கிறார். நடிகர் நடிகைகள் அவருக்குத் தெரியாத செயலை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்களை எதிர்ப்பது எங்களுடைய அரசியல் அல்ல, ஆனால் தவறை தவறு என்று சொல்லும் வலிமை பாஜகவினர் இடம் உண்டு. நடிகர் சூர்யா தன்னுடைய கருத்தை திருத்திக் கொள்ள வேண்டும்.

சில நேரத்தில் அறியாமை உண்மையை மறைத்து விடும், நடிகர் சூர்யா கேட்பது இப்பொழுது இருக்கும் மருத்துவர்கள் நீட் எழுதிய மருத்துவர்கள் ஆனார்கள்? முன்காலத்தில் மருத்துவ படிப்புக்கு குறைவான மக்கள் சேர்வார்கள் ஆனால் இன்று சுமார் 8 லட்சம் பிள்ளைகள் பதிவு செய்கிறார்கள். நடிகர் சூர்யாவை மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை நான் கேட்பது 8 லட்சம் பேருக்கும் மருத்துவர் ஆவதற்கான வசதியை திமுக செய்து தருமா இல்ல நடிகர் சூர்யா செய்து தருவாரா.?. மக்களை இனிமேலாவது ஏமாற்றுவது நிறுத்திக் கொள்ளுங்கள். பாமர மக்களுடைய உயிரோடு விளையாடாதீர்கள் என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரின் ஊடக ஆலோசகர் அமர் பிரசாத் ரெட்டி எச்சரித்துள்ளார்.

உண்மையான தகவலை மறுக்க முடியுமா?நடந்தது உண்மையா? இல்லையா?சட்டசபையில் எதிர்கட்சிகளை தெறிக்க விட்ட எடப்பாடியர்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *