உட்கந்து தின்கிறவன்லாம் மேல் சாதி வம்சமா.? இயக்குனர் ரஞ்சித்தை பின்பற்றி குறிப்பிட்ட சமூகத்தை சீண்டும் சூர்யா.!

தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சீண்டும் விதத்தில் பொது மேடைகளில் பேசுவது, தனது படத்தில் வசனங்களை இடம்பெற செய்வது என தொடர்ந்து இயக்குனர் ப.ரஞ்சித் செய்து வருகின்றவர், பொது மேடைகளில் அண்டபரம்பரை, நோண்ட பரம்பரை என்று பேசியது, மேலும் சோழ மன்னா் ராஜராஜ சோழன் காலத்தில் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டது. ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் தான் இருண்ட காலம் என்று பேசியிருந்தார்.

இதற்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, மேலும் தனது சினிமா படங்களில் ஒரு குறிப்பிட்ட சமூக இளைஞர்களை தவறாக வழிநடத்த கூடிய காட்சிகளை இடம்பெற செய்வர், இவ்வாறு தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சீண்டும் விதத்திலே செயல்பட்டு வரும் இயக்குனர் ப.ரஞ்சித்தை பின்பற்றி சில குறிப்பிட்ட சமூக மக்களை சீண்டும் விதத்தில் நடிகர் சூர்யா தான் நடித்து வெளியாக இருக்கும் படத்தின் பாடல் வரிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா கடந்த எட்டு வருடத்தில் தொடர்ந்து அவர் நடித்து வெளியான எட்டு படமும் தோல்வி படமாக அமைத்துள்ளதால் அடுத்து வெளியாகி இருக்கும் சூரரை போற்று படத்தை எப்படியாவது வெற்றி அடைய செய்திட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார், நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை வெளியிடுவது, தனது பிள்ளைகளை மும்மொழி கற்று கொடுக்கும் பள்ளியில் படிக்க வைத்துக்கொண்டு மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக கருத்து தெரிவிப்பது.

என இப்படி தொடர்ந்து விரைவில் வெளியாக இருக்கும் புதிய படத்துக்கு விளம்பரம் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், ஆனால் அவருடைய கருத்துக்களை பெரிதாக எந்த ஒரு அரசியல் கட்சியும் கண்டுகொள்ள வில்லை. இந்நிலையில் சூர்யா நடித்து வெளியாக இருக்கும் சூரரை போற்று படத்தின் பாடல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது, அந்த பாடலில் இடப்பெற்ற வரிகள் ஒரு குறிப்பிட்ட சாதியினரை கடுமையாக சீண்டும் விதத்தில் அமைந்துள்ளது.

அதில் மேல் சாதி காரனுக்கு கொம்பு இருந்த காட்டுங்கடா.. உழைக்கிற கூட்டமெல்லாம் கீழ் சாதி மனுஷன், உட்கந்து தின்கிறவனுக மேல் சாதி வம்சகள், என மேல் சாதி என குறிப்பிட்டு ஒரு குறிப்பிட்ட சாதியினரை சீண்டும் விதத்திலும் தமிழகம் முழுவதும் சாதி கலவரத்தை தூண்டும் விதத்திலும் அந்த பாடல் வரிகள் அமைத்துள்ளதால், வட மாநிலம், தென் மாவட்டம், கொங்குமண்டலம் பகுதிகளில் இருக்கும் பெரும்பான்மை சாதியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு சூர்யா நடித்து வெளியாக இருக்கும் சூரரை போற்று படத்திற்கு நீதி மன்றம் தடை விதிக்கலாம் என கூறப்படுகிறது.

திருடனுக்கு தேள் கொட்டிய திருட்டு திராவிடம்.! ஈ.வெ.ராவை வெளுத்து வாங்கிய நடிகை கஸ்துரி.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *