விஜய் கோரிக்கையை ஏற்றார் இயக்குனர் சங்கர்.! KT குஞ்சுமேனன் தயாரிப்பில் இணையும் பிரமாண்ட கூட்டணி.!

இயக்குனர் சங்கருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கடந்த ஆண்டு கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் ஏற்கனவே நண்பன் படத்தில் சங்கர் இயக்கத்தில் நடித்தது நிறைய அனுபவங்களை கொடுத்தது, மீண்டும் சங்கர் இயக்கத்தில் ஒரு ஆக்சன் படம் நடிக்க ஆசை என இயக்குனர் சங்கர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார், அதற்கு சங்கர் நிச்சயமாக பணியாற்றுவோம் என விருது வழங்கும் விழா மேடையில் நடிகர் விஜய்க்கு உறுதி அளித்தார்.

இதனை தொடர்ந்து பிரமாண்ட தயாரிப்பாளரும் இயக்குனர் சங்கரை திரையுலகுக்கு அறிமுகம் செய்த KT குஞ்சுமேனன் நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் சினிமா தயாரிக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார், தயாரிப்பாளர் KT குஞ்சுமேனன் ஜென்டில்மேன், ரக்சகன், காதல் தேசம் என பிரமாண்ட படங்களை தயாரித்தவர், அவருடைய படத்தில் பிரம்மாண்டத்துக்கு பஞ்சம் இருக்காது , இயக்குனர் சங்கர் உதவி இயக்குனராக சூரியன் படத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது ஜென்டில்மேன் படத்தில் மூலம் அறிமுகம் செய்து வைத்தார் KT குஞ்சுமேனன்.

அதன் பிறகு தமிழக சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்ற பெயருடன் முன்னனி இயக்குனர் வரிசையில் இடம் பிடித்த இயக்குனர் சங்கர், தமிழ் சினிமாவை உலக அரங்கில் பேச வைத்த பெருமையை தேடி தந்தார், ஆனால் அவரை சினிமாவில் அறிமுகம் செய்த KT குஞ்சுமேனன் கடைசியாக அவர் எடுத்த இரண்டு படங்கள் தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டார், தற்போது நீண்ட இடைவேளைக்கு பின் ஜெண்டில்மேன் 2 படத்தை இயக்குனர் சங்கரை வைத்து தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஜென்டில்மேன் 2 படத்துக்கு நடிகர் விஜயை தேர்வு செய்துள்ள இயக்குனர் சங்கர் இதுகுறித்து விஜய் உடன் பேசி உறுதி செய்துள்ளார், இதற்கு தயாரிப்பாளர் KT குஞ்சுமேனன் சம்மதமும் தெரிவித்துள்ளார், மேலும் நடிகர்,நடிகைகளை தேர்வு செய்யும் பனி நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, இந்த படத்துக்கு AR ரகுமான் இசை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, தயாரிப்பாளர் முடிவும் கூட இது தான் என கூறப்படுகிறது.

மேலும் கதாநாயகியாக இந்தியில் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகையை தேர்வு செய்ய முடிவிடுத்துள்ள இயக்குனர் சங்கர், வில்லன் கதாபாத்திரத்துக்கு இந்தி நடிகரை தேர்வு செய்தால் இந்தியிலும் படம் நல்ல வசூலை தரும் என தயாரிப்பாளரிடம் இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார், தொடர்ந்து ஜென்டில்மேன் படத்துக்கான அணைத்து பணிகளும் தீவிரமாக நடந்துவரும் நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் சங்கர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்கொலை செய்த்தவர்களுக்கு போட்டி போட்டு பணம் கொடுத்தால்… தமிழகத்தில் நிதிப் பற்றாக்குறை ஏன் வராது?அர்ஜுன் சம்பத் ஆவேசம்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *