குடி போதையில் தகராறு..! கணவர் பீட்டர் பாலை தர தரவென இழுத்து வீட்டில் வெளியே வீசிய வனிதா விஜயகுமார்.!

நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் காதலித்து மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொண்ட பீட்டர் பால் உடன் அடிதடி ஏற்பட்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்ற வனிதாவுக்கு இரண்டு கணவர்கள் மூலமும் குழந்தைகள் உள்ளன. இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்த வனிதா நடன இயக்குனர் ராபர்ட் என்பவரை காதலித்து வந்தார் பின் அந்த காதலும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற வனிதா, தனது வெளிப்படையான குணம், இயல்பால் சர்ச்சைக்குள்ளானார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சுவாரசியமாக இருப்பதற்கு வனிதா முக்கிய காரணமாக இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு வனிதாவுக்கு தொலைக்காட்சிகளில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. இந்த நிலையில்தான் நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார்.

வனிதாவின் திருமணத்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சிலர் அவர் மூன்றாவது திருமணம் செய்துகொண்டது பற்றி சர்ச்சைக்குரிய விமர்சனம் செய்தனர். இருந்தும் திருமணத்திற்கு பின் இந்த புதுமண தம்பதியர்கள் சந்தோசமாக இருந்துவந்தனர், இந்நிலையில் சமீபத்தில் குடுமபத்துடன் கோவா சுற்றுலா சென்ற வனிதா, அங்கே குடிபோதையில் இருந்த பீட்டர் பால் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது, இதனால் வனிதா- பீட்டர் பால் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சென்னை திரும்பியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, கோவாவில் இருந்து திரும்பியதில் இருந்து இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது, ஒருகட்டத்தில் சம்பவம் நடந்த அன்று குடி போதையில் இருந்த பீட்டர் பால் – வனிதா இருவருக்கு இடையில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது, இதனையெடுத்து பீட்டர் பாலை வீட்டில் இருந்து தர தரவென இழுத்து வீட்டில் வெளியே வனிதா வீசியதாக கூறப்படுகிறது, இந்நிலையில் பீட்டர் பால் தற்போது அலுவலகத்தில் தங்கி வருவதால் திருமணம் நடந்து சில மாதங்களில் இந்த புதுமண தம்பதியினர் பிரிந்தது குறித்து சினிமா வட்டாரத்தில் பரப்பாக பேசப்படுகிறது.

ஜெகத்ரட்சன், பொன்முடி மகனை தொடர்ந்து துரைமுருகன் மகனை சுற்றி வளைக்கிறது அமலாக்க துறை.!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *