திமுக எம்பி செந்திகுமாரை புகழ்ந்து பாராட்டிய தமிழக பாஜக இளைஞரணி தலைவர்.! எதற்கு தெரியுமா.?

தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் எம்பியாக நாடாளுமன்றத்தில் பதவி ஏற்ற போது வாழ்க தமிழ், வாழ்க பெரியார், என கோஷமிட்டு அணைத்து திமுக எம்பிக்கள் உடன் பதவி ஏற்றவர், அப்போது சில எம்பிக்கள் தமிழ் என்கிற வார்த்தையை கூட ஒழுங்காக உச்சரிக்கவில்லை என்கிற சர்ச்சை எழுந்த போது செந்தில்குமார் எம்பி மீதும் அந்த சர்ச்சை எழுந்தது, அதன் பின் பெரும்பாலும் தனது டிவீட்டர் பக்கத்தில் ஆங்கிலத்தில் பதிவு செய்து வந்த செந்தில்குமார் எம்பி.

எம்பியாக பதவி ஏற்ற பின் தமிழில் பதிவு செய்ய தொடங்கினர் அதில் பெருபாலான பதிவுகளில் தமிழ் எழுத்து பிழை இருந்ததை தொடர்ந்து, தமிழில் பிழை இல்லாமல் பதிவு செய்ய கூட தெரியாத நீங்கள் பாராளுமன்றத்தில் வாழ்க தமிழ் என கோசமிட்டது கேலி கூத்து என கிண்டல் நெட்டிசன்கள் முதலில் தமிழை உங்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றனர். மேலும் கடந்த வருடம் நடத்த கிரிக்கெட் போட்டி ஒன்றில் பார்வையாளராக கலந்து கொண்ட செந்தில் குமார் எம்பி.

தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க என்ற பாதைகயை ஏந்திய புகைப்படம் ஒன்றை தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்த செந்திகுமார் பெரியார் புகழ் ஓங்குக, கலைஞர் புகழ் ஓங்குக என பதிவு செய்வதற்கு பதிலாக ஓங்குக என்ற எழுத்தை பிழையாக பதிவு செய்து பெரு சர்ச்சையில் சிக்கினார் அது தற்போது வரையும் கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது, இந்நிலையில் தற்போது இந்தி எதிர்ப்பை திமுக கையில் எடுத்துள்ள நிலையில்,

தினமலர் நாளிதழுக்கு செந்தில்குமார் பேட்டி அளித்தார், அதில் செந்தில்குமார் அவர்களுக்கு தமிழ் எழுத்து பிழையின்றி எழுத படிக்க தெரியாது என எழுந்துள்ள சர்ச்சை பற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள செந்தில் குமார், நான், ஏற்காடு மான்போர்டு பள்ளியில், துவக்கக் கல்வி முதல், மேல்நிலை கல்வி வரை படித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே, விருப்ப பாடமாக தமிழ்படித்தேன். தொடர்ந்து, பிரெஞ்ச் பாடத்தை படித்தேன்.

அதே நேரத்தில், ஹிந்தியை முழுமையாக எழுத, படிக்க, பேச தெரியாது.தமிழில் பேசும்போது, பிழையின்றி உச்சரிக்க முடியும். ஆனால், துவக்கக் கல்வி முதல் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தரும் பள்ளி, கல்லுாரிகளில் படித்ததால், தமிழை முழுமையாக பிழையின்றி எழுத தெரியாது என தெரிவித்திருந்தார், இதற்கு தமிழை பிழையின்றி எழுத தெரியாது என செந்திகுமார் எம்பி தெரிவித்ததை மேற்கோள்கட்டி தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் புகழ்ந்து பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யா சொல்லிட்டாரா ? உடனே இதை செய்யுங்கள்…சூர்யாவை கிண்டல் செய்து H.ராஜா நக்கல்.! கதறும் சூர்யா ரசிகர்கள்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *