கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பயங்கர தீ விபத்து , 70 கடைகளுக்கு மேல் எரிந்து நாசம்

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் நேரிட்ட தீ விபத்தில் சுமார் 70 கடைகள் எரிந்து நாசமாகின.

அப்பகுதியில் அலங்கார பொருட்கள், பேன்சி பொருட்கள் மற்றும் நறுமண பொருள்களை விற்பனை செய்யும் 500 – க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன,அதில் காந்தி மண்டபம் அருகே உள்ள கடைகளில் அதிகாலை மூன்றரை மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது.

தகவலின்பேரில் 3 வாகனங்களில் தீயணைப்பு படையினர் வந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்,தீ விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

மின் கசிவினால் தீ விபத்து நேரிட்டதா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *