தமிழக பாஜக சார்பாக, தமிழகம் முழுவதும் “நம்ம ஊரு பொங்கல்” நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக இந்நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. தமிழக பாஜக மாநில தலைவர் முனைவர் L முருகன் வழிகாட்டுதலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், பாரம்பரியபடி பொங்கல் வைத்து உறியடி, கோலப் போட்டி, சிலம்பம், கும்மி விளையாட்டு, வழுக்கு மரம் ஏறுதல் போன்ற பல தமிழ் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் கடந்த 2 தினங்களாக நடைபெற்றது.
மதுரை புறநகர் மாவட்ட பாஜக சார்பில் திருப்பாலை கிராமத்தில் நேற்று காலை நடந்த பொங்கல் விழாவிற்கு, மதுரை பாஜக புறநகர் மாவட்ட தலைவர் சுசிந்திரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநிலத் தலைவர் முனைவர் L முருகன் பங்கேற்றார்.மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் முன்னிலை வகித்தார். திட்டமிட்டபடி நிகழ்ச்சி காலையில் தொடங்கி மாலை வரை நடைபெற்றது.
மதுரையில் தோல்வி பயத்தில் இருக்கும் மதுரை கிழக்கு தொகுதி திமுக MLA மூர்த்தி, தொடர்ந்து மதுரையில் இயங்கி வரும் பாஜகவினரை மிரட்டி வருவதாகவும், கொடி கம்பங்களை அகற்றி வருவதாகவும், தொண்டர்களை மிரட்டி வருவதாகவும், காவல் துறையிடம் புகார்கள் தொடர்ந்து வந்த கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் அவரது சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றால் , தமக்கு அவமானம் ஏற்படும் என்று கருதினாராம்.இதனால் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய அவரால் முடிந்த தொந்தரவுகளை கொடுக்க நினைத்து விசிக, மற்றும் முஸ்லீம் பயங்கரவாதிகளை தூண்டி விட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கிறது.
மதுரை மேலமடையில் புறநகர் மாவட்ட தலைவர் சுசிந்திரன் அலுவலகம் உள்ளது. நேற்று பிற்பகல் 3மணிக்கு மேல், அடையாளம் தெரியாத பயங்கரவாத மர்ம கும்பல் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை சேதப்படுத்தி, அங்கு இருந்த புறநகர் மாவட்ட தலைவர் சுசிந்திரனை கத்தி மற்றும் கொடூர ஆயுதங்களை பயன்படுத்தி கொலை செய்ய முயற்சி செய்ய துணிந்துள்ளது. மயிரிழையில் தப்பிய அவர் அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி பாஜக சார்பில் சாலை மறியல் நேற்று மாலை நடைபெற்றுது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மாநகரக் காவல் துணை ஆணையா் சிவபிரசாத், கட்சியினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில், அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவா்கள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்று உறுதி அளித்ததைத் தொடா்ந்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை அந்த பயங்கரவாதிகளை போலீசாரால் நெருங்கமுடியவில்லை.