நாகூர் தர்காவுக்கு 20 கிலோ சந்தன கட்டைகளை இலவசமாக வழங்கினார் முதலவர் பழனிசாமி.!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 20 கிலோ சந்தன கட்டைகளை இலவசமாக வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா நிர்வாக குழு நிர்வாகி கே.அலாவுதீனிடம் (ஓய்வு) வழங்கினார். இதுகுறித்து விபரம் வருமாறு:- இந்தியாவில் உள்ள புனித தலங்களில் சிறப்பு வாய்ந்ததும், இஸ்லாமிய புனித ஸ்தலங்களில் முக்கியமானதும், சமூக நல்லிணக்கத்திற்கும்,

சமுதாய ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக திகழும் நாகூர் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்) திருவிழாவிற்கு விலையில்லாமல் சந்தனக் கட்டைகள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 25.11.2012 அன்று அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, 2013-ம் ஆண்டு முதல், நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு ஆண்டுதோறும் விலையில்லாமல் சந்தனக் கட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நடைபெறவுள்ள நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 20 கிலோ சந்தன கட்டைகளை இலவசமாக வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா நிர்வாக குழுவினரிடம் முதலமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்வின்போது, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சந்தீப் சக்சேனா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) முனைவர் பெ.துரைராசு, நாகூர் தர்கா நிர்வாக குழு நிர்வாகி – ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி எஸ்.எஃப். அக்பர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மாரிதாஸ் வீட்டில் போலீசார் ஆறு மணி நேரம் சோதனை.! ஒரு மடி கணினியை போலீசார் எடுத்து சென்றனர்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *