விவசாயிகளை சுட்டுக் கொன்று ஆட்சியை இழந்த முதல்வர்

தமிழகத்தில் நடந்த பல கொடூரங்களை நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வீட்டில் உள்ள வயதான பெரியோர்களிடம் கேட்ட போது, 1970 களில் திமுக கருணாநிதி ஆட்சியில், விவசாயிகளுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.

Labour Commit suicide: Children suffering from hunger, wife's jewelry not sold. : Scrollive

மக்களை கவனிக்காமல் முழுநேர கொள்ளையில் அன்றைய ஆட்சி இருந்ததால், தரித்திரம் தாண்டவமாடியது. தமிழகம் முழுவதும் பஞ்சத்தில் குச்சிக்கிழங்குகளை சாப்பிட்டு மக்கள் உயிர் பிழைத்த காலம் அது. அந்த நேரத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்தியது கருணாநிதி அரசு.

மின்சாரக் கட்டணம் வெறும் ஒரு பைசா குறைக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி போராட வந்தனர். எவ்வளவோ முயன்றும் காவல்துறையால் அந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. ஒரு கட்டத்தில் தடியடி, கைது என்று அடக்கு முறைகளைக் கையாண்ட திமுக அரசு, துப்பாக்கி தாக்குதலில் ஈடுபட துணிந்தது.

காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கருணாநிதி, விவசாயிகள் மீது துப்பாக்கியால் சுட உத்தரவிட்டார். கோவை (இன்று திருப்பூர்) மாவட்டம் பெருமாநல்லூரைச் சேர்ந்த ராமசாமி கவுண்டர், மாரப்ப கவுண்டர், ஆயிக் கவுண்டர் என்ற மூன்று விவசாயிகள்
துப்பாக்கி சூட்டில் இறந்தனர். இன்றும் அவர்கள் நினைவாக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு சாட்சியாக நிற்கின்றது.

அப்போதிருந்த திமுக ஆட்சி இதை ஏளனமாக பிச்சைக்காரர்கள் போராட்டம் என்று விமர்சித்தது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, துப்பாக்கியிலிருந்து தோட்டா வராமல் மலர்களா வரும் என்று எகத்தாளமாக பேட்டி கொடுத்ததை இன்று உள்ள பலரும் அறியமாட்டார்கள்.

அடுத்த சிக்கலாக வங்கிகள் விவசாயிகள் நிலங்களை திமுக ஆட்சியில் கையகபடுத்த தொடங்கிற்று, அமைதியாக பார்த்துகொண்டிருந்தார் கருணாநிதி. விளைவு 1972-ம் ஆண்டு விவசாய ஜப்தி நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கனூரில் 5 விவசாயிகள் பலியானார்கள். தமிழ்நாடு கொந்தளித்தது, விவசாயிகள் மாட்டுவண்டிகளுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர், ஆனால் கருணாநிதி அரசு இரக்கமின்றி அவர்களை சுட்டது.

மதுரை மாவட்டம் வேடசந்தூர் (தற்போது திண்டுக்கல் மாவட்டம்),
திருநெல்வேலி மாவட்டம் நொச்சி ஓடைப்பட்டி ஆகிய ஊர்களில் நடந்த விவசாயப் போராட்டங்களில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் போலீஸ் அடக்கு முறைக்கு பலியானார்கள். மாட்டுவண்டி போராட்டத்தில் பங்கேற்று போராடிய விவசாயிகள் 30 ஆயிரம் பேரை, திருச்சி, வேலூர், மதுரை, கோவை உள்ளிட்ட மத்திய சிறைகளில் மூன்று மாதங்கள் அடைத்துவைத்து கடும் சித்திரவதை செய்தது அன்றைய கருணாநிதி அரசு.

எந்த ஒரு போராட்டத்திலும் இனிமேல் பங்கேற்க மாட்டோம் என்கிற வாக்குறுதியை மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டு சில விவசாயிகளை விடுதலை செய்தது. எழுதிக் கொடுக்கமாட்டோம் என்று உறுதியாக இருந்த 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடும் சித்திரவதையால் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்கள். கிட்டத்தட்ட 60 விவசாயிகள்_சாவுடன்,
ஏராளமான விவசாயிகள் மேல் வம்பு, வழக்கு மிரட்டலென தமிழகம் மிரட்டபட்ட‌ நேரம். மிசா காலம் வந்து கருணாநிதி அரசு டிஸ்மிஸ் செய்யபட்டது. கருணாநிதி 1977ல் தோற்றதற்கு விவசாயிகள் மேல் எடுத்த நடவடிக்கையும் துப்பாக்கிசூடுமே காரணம்.

அதந் பின் ரஜினி மற்றும் சோவின் முயற்சியால், 1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக. தனியார் வியாபார சந்தையின் புரோக்கர் அட்டகாசத்தை ஒழியுங்கள் என கோரிக்கை வைத்தபொழுது கருணாநிதி கண்டுகொள்ளவே இல்லை. விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கான விலையை புரோக்கர்களே முடிவு செய்தார்கள்.
இதனால் உழைக்காத புரோக்கர்களே கொழுத்த லாபம் பார்த்தனர்
இதனால் விவசாயிகள் நஷ்டத்தினால் நிலங்களை விற்க ஆரம்பித்தார்கள்.

இப்பொழுது மோடி அரசு அந்த இடைதரகர்களைத்தான் கட்டுபடுத்துகின்றது. அதற்குத்தான் ஸ்டாலின் இந்த ஆர்ப்பாட்டத்தை செய்கிறார். நல்ல விவசாயி இந்த சட்டத்தை நிச்சயம் எதிர்க்கமாட்டார்கள். கருணாநிதி ஆடிய நாடகத்தையே, அவரது மகன் ஸ்டாலினும் ஆட வந்திருக்கின்றார் என்பதை தவிர சொல்ல ஒன்றுமில்லை, இதெல்லாம் தமிழக விவசாயிகள் உணர வேண்டிய விஷயம்.

Acche din for farmers: Modi govt to announce Rs 4,000 per acre direct transfer, crop loan at 0 per cent interest - Business News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *