கருவாடு எப்படி மீன் ஆகாதோ அதேபோல்….! முக ஸ்டாலினை செம்ம கலாய் கலாய்த்த செல்லூர் ராஜு.!

பித்தலாட்ட அரசியலைத்தான் திமுகவினர் செய்கின்றனர். நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகின்றனர். என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மேலும் பேசிய செல்லூர் ராஜு , திமுக அப்பா மகன், அப்பாவின் மகன், மகனின் மகன் என குடும்ப கட்சியாக உள்ளது. என்னைத்தவிர என் குடும்பம் கட்சிக்குள் வராது என்று சொன்னார் ஸ்டாலின். ஆனால் தற்போது ஸ்டாலினின் குடும்பமே கட்சிக்குள் வந்துள்ளது.

எதையுமே மாற்றி பேசக்கூடியவர்கள் தான் தி.மு.க.வினர். திமுகவில் மன்னர் பரம்பரை ஒழியவில்லை. அம்மாவின் சாதாரண தொண்டர்களாக இருந்து இன்றைக்கு கழகத்தை வழிநடத்தி மக்கள் போற்றும் ஆட்சி நடத்தியை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் நடத்தி வருகின்றனர். கழகத்தில் விசுவாசமாக இருந்தால் பதவி தேடி வரும். உண்மையும், விசுவாசமும் என்றும் இருந்தால் அடிமட்ட தொண்டராக இருந்தால் கூட உயர் பதவிக்கு வரலாம்.

அதிமுகவின் ஆரம்ப காலத்தில் எம்ஜிஆர் படத்திற்கு கேரண்டி உண்டு. அவர் கட்சிக்கு கேரண்டி இல்லை என எதிர் கட்சியினர் விமர்சித்தனர். ஆனால் 13 ஆண்டுகள் திமுகவை ஆட்சியில் இல்லாமல் வனவாசம் போக செய்தார். எங்களின் ஒரே நோக்கம் எதிரியை (தி.மு.க.) வீழ்த்துவது மட்டுமே. ஆற்றுக்கு இருகரை எப்படி முக்கியமோ, அதுபோல அதிமுகவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் முக்கியம். கண்ணுக்கு எப்படி இரு இமை முக்கியமோ அதேபோல கட்சிக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் முக்கியம்.

நீட் மோசமானது என்பதை அம்மா உணர்ந்து தான் அன்றே எதிர்த்தார். கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றினால் பாதிப்பு ஏற்படும் என நீட்டை எதிர்த்த ஒரே தலைவர் அம்மா.திமுக மத்தியில் ஆட்சியில் இருந்தபோது அன்றே நினைத்திருந்தால் கல்வியை மாநிலப்பட்டியயில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றி இருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் தற்போது நீட்டால் தற்கொலை செய்து கொண்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கிறார் உதயநிதி.

பித்தலாட்ட அரசியலைத்தான் திமுகவினர் செய்கின்றனர். நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகின்றனர். காவிரி நீட் என மொத்த துரோகத்தையும் செய்துவிட்டு ஆட்சிக்கு வர துடிக்கிறது. எப்படி கடல் நீர் வற்ற முடியாதோ, கருவாடு எப்படி மீன் ஆகாதோ அதேபோல் தான் திமுக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

அகரம் பவுண்டேசன் கணக்கு சோதனையில் மத்திய அமலாக்க துறை.! கோடி கணக்கில் ஹவாலா பணமா.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *