விதைக்கும் போதே விலையை நிர்ணயம் செய்து பயன் பெற்ற விவசாயி… – புதிய வேளாண் சட்டம்

ஜிதேந்திர போஜி என்பவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒரு விவசாயி.  இவர் தனது வயலில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார்.  தனது பயிரை 3,32,000 ரூபாய்க்கு விற்றுவிடுவதாக ஒரு வியாபாரியிடம் (Trader)  உடன்படிக்கை செய்து கொண்டார் ஜிதேந்திரா.  மேலும் 25,000 ரூபாயை முன்பணமாகவும் பெற்றுக்கொண்டார்.  அறுவடை முடிந்தது.  அந்த வியாபாரி மக்காச் சோளத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார்.  வியாபாரியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி 15 நாட்களுக்குள் மீதி பணத்தை அவர் தந்துவிட வேண்டும்.  ஆனால் பணம் வரவில்லை.
மோடி அரசின் புதிய வேளாண்மை சட்டத்தின் படி, விற்பனை செய்த மூன்று நாட்களுக்குள் விவசாயிக்கு பணம் வந்து சேர வேண்டும்.  இல்லாவிட்டால் புகார் அளிக்கும் உரிமை விவசாயிக்கு உள்ளது.  மோடி அரசின் வேளாண்மை சட்டத்தின்கீழ் ஜிதேந்தர் தனது புகாரை பதிவு செய்தார்.  புகார் பதிவு செய்த சில தினங்களிலேயே முழு பணமும் விவசாயிக்கு கிடைத்துவிட்டது.
இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு ‘மன் கி பாத்‘ நிகழ்ச்சியில் பேசுகையில், “இனி விவசாயிகள் ஏமாற மாட்டார்கள், அவர்களை யாரும் ஏமாற்றவும் முடியாது. புதிய வேளாண் சட்டங்கள் அவர்களுக்கு அரணாக அமைந்துள்ளன” என்கிறார் பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி.
இந்திய விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக வேண்டும் என்பதற்காக மோடி அரசு அயராது உழைத்து வருகிறது.  இதற்காகவே மூன்று புதிய வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டன.
இந்திய விவசாய சந்தை, இடைத்தரகர்களால் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறது.  அறுவடை சமயத்தில் வேண்டுமென்றே விலையை குறைத்து விடுகின்றனர் இந்த இடைத்தரகர்கள்.  விவசாயின் உழைப்பை அட்டை போல உறிஞ்சி, விளைச்சலை அடிமாட்டு விலைக்கு வாங்கி விடுகின்றனர் இந்த இடைத் தரகர்கள்.  பின்னர் வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் அடைகின்றனர்.
மோடி அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்தின் கீழ், விதைக்கும் போதே தன் விளைச்சலின் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை விவசாயிக்கு அளிக்கப்படுகிறது.  விவசாயி நேரடியாக வியாபாரியிடமோ அல்லது நிறுவனத்துடனோ, தன் விளைச்சலை குறிப்பிட்ட விலைக்கு விற்பனை செய்வதற்காக ஒப்பந்தம் செய்து கொள்ளும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டது.  ஒருவேளை அறுவடை சமயத்தில் ஒப்பந்த விலையை விட வெளி மார்க்கெட்டில் விலை அதிகமாக இருந்தால் வெளிச் சந்தையில் விற்று கொள்ளும் அதிகாரமும் விவசாயிக்கு இந்த வேளாண் சட்டம் வழங்குகிறது.  அதுபோலவே ஒப்பந்தத்தை மீறி வாங்கின பொருளுக்கான பணத்தை மூன்று நாட்களுக்குள் அளிக்காவிட்டால்புகார் அளிக்கும் உரிமை விவசாயிக்கு உண்டு.
வேளாண் சட்டத்தை நன்கு அறிந்திருந்ததால் ஜிதேந்திரா புகார் அளித்தார்.  சில தினங்களிலேயே தன் பணத்தை திரும்ப பெற்றார்.  மோடி அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பெரும் பாதுகாப்பை அளிக்கின்றன.  விவசாயிகளின் வருமானம் இருமடங்காக உயரும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *