நாட்டிலேயே முதல்முறையாக ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் போக்குவரத்தை டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்பத்தின் புதிய வடிவமாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விஹார் வழித்தடத்தில் அறிமுகமாகும் இந்த சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வைப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து வழித்தடங்களிலும் பயணிகள் பயன்படுத்தும் வகையிலான தேசிய பொது பயண அட்டையையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்துகிறார்.