ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பள்ளி மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் மேலாண்மை மற்றும் தொழில்முனைதல் பள்ளி கட்டிடங்களுக்கான அடிக்கல்லை மத்திய கல்வி அமைச்சர் நாட்டினார்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பள்ளி மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் மேலாண்மை மற்றும் தொழில்முனைதல் பள்ளி கட்டிடங்களுக்கான அடிக்கல்லை காணொலி நிகழ்ச்சி ஒன்றில் மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ இன்று நாட்டினார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் எம் ஜகதீஷ் குமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அமைச்சர், இந்தியாவின் லட்சியமிக்க பிரதமராகவும், ஊக்கமளிக்கும் எழுத்தாளராகவும் விளங்கிய திரு அடல் பிகாரி வாஜ்பாயின் பெயர் மேலாண்மை மற்றும் தொழில்முனைதல் பள்ளிக்கு சூட்டப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.