பிரதமரை இழிவுபடுத்திய கயவர்கள். ஆர்ப்பாட்டம், பாஜகவினர் கைது.

அரசியல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், பாரத பிரதமர் மோடி அவர்களை‌ இழிவுபடுத்தி அவதூறு செய்த SDPI, மற்றும்‌ PFI இசுலாமிய அமைப்புக்களை கண்டித்து நேற்று நடந்த கூட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் பேசினார். கல்யாணராமன் பேச ஆரம்பித்த பொழுது அதில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தினர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்:

Arjun Sampath (@imkarjunsampath) | Twitter

கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் இசுலாமிய‌ பயங்கரவாத அமைப்புக்களின் குண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து பிரச்சனை செய்துள்ளனர். ஆனால் காவல்துறை அந்த பயங்கரவாதிகளை அகற்றவோ அல்லது அவர்களை கைது செய்யவோ துளி கூட யோசிக்கவில்லை; மாறாக அவர்களிடத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தது.
இந்நிலையில் கூட்டம் முடிந்து ஒரு இல்லத்தில் உணவருந்தி
கொண்டிருந்த கல்யாணராமனை கைது செய்து இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புக்களை திருப்தி செய்வதை மீண்டும் நிரூபித்துள்ளது கோவை மாவட்ட காவல்துறை.

அனுமதி பெறப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அத்து மீறிய இசுலாமிய பயங்கரவாதிகளை கைது செய்யாத காவல்துறை, பிரதமர் மோடி அவர்களை இழிவாக பதிவிட்ட இசுலாமிய பயங்கரவாதிகளை கைது செய்யாத காவல்துறை, கல்யாணராமனை மட்டும் கைது செய்ததில் இருக்கும் மர்மம் என்ன? என வினவியுள்ளார்.

உடனடியாக கல்யாணராமனை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசையும், காவல் துறையையும் கேட்டுக்கொள்கிறேன், போராட்டத்தை நீங்களே தூண்டாதீர்கள், இந்து விரோத செயல்களுக்கு துணை போகாதீர்கள்.

பா.ஜ.க.மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், முன்னாள் நகரமன்ற தலைவர் திரு சதீஷ் அவர்களையும் உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்!

ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு உள்ள தமிழக காவல்துறையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள இந்து தலைவர்கள் கல்யாணராமன், சதீஷ் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியும் தமிழகம் முழுக்க இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஜனநாயக வழியில் அறப் போராட்டங்கள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *