சடலங்களின் வணிகர்கள்

உலகம்

எப்போது ஒரு கொடிய நோய் இந்த உலகை தாக்கும், நாம் எப்போது ஒரு மருந்தை தயாரித்து கோடிகளில் சம்பாதிக்கலாம் என மேற்கத்திய மருத்துவ வணிக நிறுவனங்கள் கழுகு போல காத்துக் கொண்டிருக்கும். பிணங்களின் எண்ணிக்கையை வைத்து, அந்த தடுப்பூசி மருந்தின் விலையை கூட்டி விடுவர்.

1990ல், குழந்தைகளுக்கு ஹெபடிடிஸ்-பி (Hepatitis -B) தடுப்பூசி கட்டாயம் போடப்பட வேண்டும், இது எய்ட்ஸை விட ஆபத்தானது என்று அறைகூவல் விடுத்தனர். 2 ரூபாய்க்கு கிடைக்க வேண்டிய அந்த ஊசி, அப்போது வெளிநாட்டு நிறுவனங்களால் 2000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது இது 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சீன வைரஸான #கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவுடன், இந்த #சடலங்களின்_வணிகர்கள் அதிக சந்தோசத்துடன் தடுப்பு மருந்துகளை தயாரிக்க தொடங்கினர். எப்படியும் ஒரு ஊசியை 10,000 முதல் 20,000 ரூபாய் வரை விற்று விடலாம் என நினைத்திருந்த அவர்களுக்கு இடியாய் இறங்கியது பாரத தேசத்தில் தயாரிக்கப்பட்ட கோவிசீல்டு, கோவாக்சீன் மருந்துகள்.

பாரத பிரதமர் மோடி ஜி க்கு இந்த பிராடுகளின் மொள்ளமாறி தனம் தெரியும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தானம் போன்ற போர்வையில் பில்கேட்ஸ், pfizer போன்ற அமெரிக்க அயோக்கியத்தனம் செய்யும் பிராடுகளை நன்றாகவே அவர் அறிந்து வைத்திருக்கிறார்.

இதனால் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் மிகப்பெரிய இலவச தடுப்பூசி அபயான் நடத்தி வருகிறார் மோடி ஜி. பாரத தேசத்தில் தயாரிக்கப்பட்ட இந்த கொரோனா தடுப்பூசிகள் உலகில் விலை குறைந்த தடுப்பூசிகளாக அறியப்படுகிறது. மேலும் இதை இலவசமாக பலருக்கும், பல நாடுகளுக்கும் கொண்டு சேர்த்தார். வணிக ரீதியில் மிகக் குறைந்த விலையில் பல நாடுகளுக்கு இந்த மருந்துகள் சென்றன.

தற்போது இங்குள்ள அமெரிக்க, சீன அடிவருடிகள் மூலம் கொரோனா தடுப்பூசி பற்றியும், கொரோனா நோய் தொற்றை சரியாக இந்தியா கையாளவில்லை என்று அழுது புலம்பிக் கொண்டிருக்கின்றனர் இந்த சடலங்களின் வணிகர்கள். பாவம், பல கோடி வருமானம் போச்சே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *