காட்டில் பிரதமர் மோடியுடன் எடுத்த புகைப்படம் தனக்கு மிகவும் பிடித்தமானது-பியர் கிரில்ஸ்

இந்தியா உலகம் லைப்ஸ்டைல்

பிரதமர் மோடியுடன் காட்டில் தேநீர் அருந்திய போது எடுத்த புகைப்படம், தனக்கு மிகவும் பிடித்த புகைப்படங்களுள் ஒன்று என பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார்.

காட்டுக்குள் சென்று உயிர் பிழைப்பது எப்படி என்பது குறித்த பியர் கிரில்ஸின் ‘Man Vs Wild’ எனும் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் மோடியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ள பியர் கிரில்ஸ், மிகவும் குளிரான சீதோஷ்ண நிலையில் பிரதமர் மோடியுடன் நேநீர் அருந்திய போது எடுக்கப்பட்ட புகைப்படம், தனக்கு பிடித்தமான புகைப்படங்களுள் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *