ஒரு கோடி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றிய மிஷினரிகளின் தில்லுமுல்லு

ஆன்மீகம் தமிழகம் நகரம்

ஒரு கோடி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றிய மிஷினரிகளின் தில்லுமுல்லு குறித்து “மிஷன் காளி” கடும் எச்சரிக்கை …Oasis World Ministries இது அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்திலிருந்து இயங்கும் கிருத்துவ மிஷனரி.  “மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 830 கிணறுகள் வெட்டி உள்ளோம்” என்று இந்த மதமாற்றம் இயக்கம் அறிவிக்கிறது.  மக்களுக்கு குடிநீர் வழங்குகிறோம் என்ற போர்வையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட சர்ச்சுகளை இந்த இயக்கம் கட்டியுள்ளது என்று மிஷன் காளி எச்சரிக்கிறது.

Hindutva groups for statute change to save Hindu customs | India News -  Times of India

ஒரு கோடி மக்களை நாங்கள் மதம் மாற்றியுள்ளோம் மேலும் 3 கோடி மக்களை மதம் மாற்ற வேண்டும் என்ற இலக்கு உள்ளது என்கிறது Oasis World Ministries.கிருத்துவ மிஷனரிகளின் வழக்கமான ஏமாற்று வித்தையான “குருடர்கள் பார்க்கிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள், ஊமைகள் பேசுகிறார்கள்” என்பதையே இந்த மிஷனரியும் கையாள்கிறது என்று எச்சரிக்கிறது மிஷன் காளி இயக்கம்.அயல் நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளுக்கான டூரிஸ்ட் விசாவில் இந்தியாவிற்குள் நுழைந்து மதமாற்றம் வேலைகளில் இந்த இயக்கம் ஈடுபடுவதாக குற்றம் சாட்டுகிறது மிஷன் காளி இயக்கம். இந்திய சட்டங்களின்படி சுற்றுலா விசாவில் வருபவர்கள் மதமாற்றம் செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.  எனவே மிஷன் காளி இயக்கம் இது குறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *