மதுரை மேலூருக்கு அருகே உள்ள தும்பையாபட்டியில் பிறந்தவர் பி.கக்கன். பள்ளி வயதிலேயே சுதந்திர போராட்ட இயக்கத்தில் சேர்ந்து பெரும் போராட்டங்களில் பங்கெடுத்தவர், 1939ல் மதுரை வைத்தியநாத அய்யர், பசும்பொன்முத்துராமலிங்க தேவர் தலைமை ஏற்ற மதுரை மீனாச்சி அம்மன் கோவிலில் நடந்த ஹரிஜன மக்களின் ஆலய பிரவேசம் நிகழ்ச்சியை நடத்தியவர்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று அலிப்பூர் சிறையில் கொடும் அடக்குமுறையைஅனுபவித்தவர், 1957-ல் பொதுப்பணித்துறை அமைச்சராக, தமிழக அமைச்சரவையில் பொறுப்பேற்றார்,1963 முதல் 1967 வரை சென்னை மாகாணத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவர். விவசாயம், ஆதி திராவிடர்நலத்துறை என பல துறைகளின் பொறுப்பு இவர் வசம் இருந்துள்ளது.
வைகை, மேட்டூர் அணைகளை உருவாக்கியதில்பெருந் தலைவர் காமராஜருக்கு அடுத்த பெருமைகக்கன்ஜிக்கு உண்டு.
மெரினாவில் ஹிந்துக் கடவுள்களின் சிலைகளை, தனது எச்சரிக்கையையும் மீறி, தந்தை பெரியார் எரித்த போது, சற்றும் தயங்காமல் அவரைக் கைது செய்து சிறையிலடைத்த பெருமைக்கு உரியவர் கக்கன்.