மேற்குவங்க தேர்தலில் மம்தாவை தோற்கடிக்க பெண்கள் முடிவு செய்துவிட்டனர்” – பிரதமர் மோடி

அரசியல் இந்தியா தமிழகம்

மேற்கு வங்க மாநிலத்தை வளர்ச்சி அடையச் செய்ய, பாஜக உறுதிகொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

PM Narendra Modi addresses nation through 'Mann ki Baat': 5 key points

கான்டை என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர், மேற்குவங்கத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்போம் என்றார். மேற்குவங்க மக்களின் தேவைகளை பாஜக நிறைவேற்றும் என்று மோடி உறுதி அளித்தார்.

விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை முதலமைச்சர் மம்தாபானர்ஜி செயல்படுத்த வில்லை என்று குற்றம்சாட்டிய பிரதமர், தேர்தலில் மம்தாவை தோற்கடிக்க பெண்கள் முடிவு செய்து விட்டதாக தெரிவித்தார்.

மம்தாவின் ஆட்சி மே 2 ஆம் தேதியுடன் முடிவடைந்து விடும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *